;
Athirady Tamil News

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

0

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது 12 கொரோனா தொற்றாளர்கள் வரை இனங்காணப்பட்டு அவர்கள் தொற்று சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் சுகாதார பிரிவினரின் முழுமையான முயற்சியினால் நெடுங்கேனி பகுதி சில நாட்கள் முடக்கப்பட்டு கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து சுகாதார பிரிவினர் அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில் இன்றையதினம் (02.12.2020) வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர் என முதலாவது அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டதினையடுத்து தற்போது மீண்டும் அவ் நபரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் நெடுங்கேணி பகுதி முடக்கப்படுமா என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

மஹர சிறைச்சாலையில் மோதல்: மேலும் 107 பேருக்கு காயம்!!

149 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு!!

சுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த அதிகபட்ச முயற்சி எடுக்க வேண்டும்: GMOA!!

காரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!

மஹர சிறைச்சாலை அமைதியின்மை – 4 பேர் பலி!!

கொரோனா வைரஸ் பரவல்- பிரதமர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!!

தீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும் – இ.இளங்கோவன்!!

600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்!!

யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)

வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 13 =

*