வவுனியா புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கில் – துவிச்சக்கரவண்டி விபத்து !! (படங்கள்)
வவுனியா புகையிரத நிலைய வீதியில் மோட்டார் சைக்கில் – துவிச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் காயம்
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – துவிச்சக்கரவண்டி விபத்தில் முதியவரோருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரிக்குளம் ஊடாக வந்த மோட்டார் சைக்கில் புகையிரத நிலைய வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் குருமன்காடு பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 68 வயது மதிக்கத்தக்க முதியவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”