;
Athirady Tamil News

வடமாகாணத்தில் மார்ச் மாதம் முதல் 84 நோயாளர்களுக்கு கோவிட் – 19 தொற்று!!

0

வடமாகாணத்தில் மார்ச் மாதம் முதல் இன்றுவரையான காலப்பகுதியில் 84 நோயாளர்கள் கோவிட் – 19 தொற்று நோய்க்கு உள்ளாகி உள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதில் மார்ச் மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 17 நோயாளர்களும் ஒக்டோபர் மாதம் 39 நோயாளர்களும் நவம்பர் மாதம் 27 நோயாளர்களும் டிசெம்பர் மாதம் இன்றுவரை ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நவம்பர் மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 13 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 8 பேரும் மன்னார் மாவட்டத்தில் இருந்து 4 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 2 பேருமாக மொத்தம் 27 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் பிசிஆர் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு மேலதிகமாக அவசியம் ஏற்படும்போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் உள்ள ஆய்வுகூடங்களுக்கு மாதிரிகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

வடமாகாணத்தில் உள்ள ஆய்வுகூடங்களில் ஒக்டோபர் மாதத்தில் 7 ஆயிரத்து 124 பிசிஆர் பரிசோதனைகளும் நவம்பர் மாதத்தில் 8 ஆயிரத்து 69 பிசிஆர் பரிசோதனைகளும் கொழும்பு அனுராதபுரம் ஆய்வுகூடத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் கோவிட்-19 சிகிச்சை நிலையங்களாக மருதங்கேணி வைத்தியசாலை, கோப்பாய் கல்வியற் கல்லூரி மற்றும் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் மாகாண தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியன இயங்கிவருகின்றன.

இதில் மருதங்கேணி வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் தற்பொழுது 50 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பார்
வடமாகாணம்
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

மஹர சிறைச்சாலையில் மோதல்: மேலும் 107 பேருக்கு காயம்!!

149 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு!!

சுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த அதிகபட்ச முயற்சி எடுக்க வேண்டும்: GMOA!!

காரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!

மஹர சிறைச்சாலை அமைதியின்மை – 4 பேர் பலி!!

கொரோனா வைரஸ் பரவல்- பிரதமர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!!

தீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும் – இ.இளங்கோவன்!!

600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்!!

யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)

வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*