;
Athirady Tamil News

இமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான் கழுத்தில் போர்டு மாட்டிய ஆரி! (வீடியோ, படங்கள்)

0

நான் பதில் சொல்லக் கூடாது, அவன் கருத்து மட்டும் வரணும், அது எனக்கு எதிரா இருக்கணும்.. என ஆரியின் இமேஜை டேமேஜ் பண்ண பாலா போட்ட திட்டத்தை தெளிவாக புரிந்து வைத்து விளையாடி வருகிறார் ஆரி.

எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும், அதில் குத்தம் குறையை கண்டுபிடித்து பிரச்சனை செய்து வரும் பாலா, அதனை ஆரி செய்வதாக பழி போட்டு, மீண்டும் பிக் பாஸ் வீட்டி தனது பொய் கணக்கை அதிகரித்து வருகிறார்.

சன் டே தான் கமல் பாலாவை நல்லா விளையாடுனீங்கன்னு பாராட்டிய நிலையில், இப்போ பாலா விளையாடிய கேமை நிச்சயம் கமல் விளாசுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய பேகேஜ் லிஸ்ட்

ஆரியை பேகேஜ் கேரி பண்றீங்கன்னு பழி சொன்ன பாலா, இன்னைக்கு எலுமிச்சை பழம் மேட்டரில் இருந்து ஒவ்வொரு விஷயமாக லிஸ்ட் போட்டு, பிளான் பண்ணி ஆரியை காலி பண்ண வேண்டும் என்றே கால் பண்ணி பேசினார். ஆரியிடம் எந்த கேள்விக்கும் விடை கேட்காமல் இருந்த இடத்திலேயே லக்சரி கேமை பாலா சரியாக விளையாடவில்லை என்பது தெரிந்தது.

அவ்வளவு வெறுப்பு

ஆரியும் பாலாவும் சரி சமமாகத் தான் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர். ஆனால், பாலாவுக்கு ஆரி மீது இருக்கும் வெறுப்பு காரணமாக பாலா தன்னுடைய கேமை விளையாடாமல், கோட்டை விடுகிறார் என்கிற குற்றச்சாட்டை ஆரி எப்பவோ எடுத்துக் கூறினாலும், ஏகப்பட்ட பேர் சொன்னாலும் பாலா திருந்துவதாகத் தெரியவில்லை.

காதல் விவகாரம்

பாலாவும் ஷிவானியும் லவ் பண்றோம் என்றால், அதை நாங்க தான் ரசிகர்களுக்கோ மத்தவங்களுக்கோ சொல்லணும், நீங்க அப்படி பேசி இருக்கக் கூடாது என்றும் தனது வாதங்களை மட்டுமே பாலா அடுக்கினாரே தவிர, அதை ஏன் சொன்னீங்க ஆரி அதற்கு விளக்கம் கொடுங்க என எங்கேயும் பாலா கேட்கவில்லை.

கேப்டன் கேம்

கடைசியா நடந்த கேப்டன் தேர்வு செய்வதற்கான டாஸ்க்கின் போதும், மற்றவர்கள் விளையாட்டை மட்டுமே கவனித்து விளையாடிய நிலையில், அதில் எப்படி சண்டையை உருவாக்கலாம், கன்டென்ட் எப்படி தேடலாம் என நினைத்து விளையாடியது பாலா தான். யார் பக்கம் நியாயம் இருக்கு? என ஏகப்பட்ட குறும்படங்கள் வைரலாகி வருகின்றன.

பாலாவின் ஸ்மார்ட் மூவ்

ஆரியை பற்றி அடுக்கடுக்கா குற்றச்சாட்டுகளை மட்டுமே முன் வைத்து விட்டு, அவரை நல்லவர் இல்லை என பிராண்ட் செய்வது மட்டுமே பாலாவின் வேலையாக அந்த டாஸ்க்கில் இருந்தது. ஆரியை கால் பண்ணி பேசி, போனை கட் செய்ய வைத்திருக்க வேண்டும். ஆரியிடம் விளக்கம் கேட்டால், அதற்கு பதில் சொல்லி அவர் ஸ்கோர் செய்து விடுவார். அவரை பதில் சொல்ல விடாமல் ஸ்மார்ட் மூவ் செய்தார் பாலா என்பதை கோபமே படாமல் ஆரி அழகா ஹேண்டல் பண்ண இடத்திலேயே இந்த வாரமும் ஓட்டுக்களை அள்ளிவிடுவார்.

பாலா

கழுத்தில் போர்டு ஆரியை பதிலே சொல்ல விடாமல் போன் கால் கட் பண்ணிய பாலா, ஆரிக்கும் 5 ஸ்டார்களையும் அள்ளிக் கொடுத்தார். எப்படி ரியோவுக்கு 5 ஸ்டார் கொடுத்தாரோ அதை போலவே, பின்னர், அடுத்த வாரத்திற்கு நேரடியாக நாமினேட் ஆன பாலா அந்த போர்டை கழுத்தில் மாட்டிக் கொள்ள முடியாமல் மற்றவர்களிடம் உதவிக் கேட்டு கெஞ்சியதும் பார்க்கவே சகிக்கல!“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 10 =

*