;
Athirady Tamil News

அடங்காத சுச்சி.. பிக்பாஸ் பாலாஜி குறித்து சர்ச்சை பதிவு.. கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்! (வீடியோ, படங்கள்)

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிரபல பாடகியும் ஆர்ஜேவுமான சுச்சி பங்கேற்றார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த முதல் நாளில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டாய் அழைத்து வெளியில் என்ன மாதிரியான தாக்கம் உள்ளது என்பதை தனித்தனியாக ரிவ்வியூ கொடுத்தார்.

பாலாஜியிடம் மட்டும் ஆனால் அதன்பிறகு ஹவுஸ்மேட்டுகளிடம் மூஞ்சைக் காட்டி யாரையுமே நெருங்க விடவில்லை. அவர் எப்போது என்ன மனநிலையில் இருப்பார் என பேசவே பயந்தனர் ஹவுஸ்மேட்ஸ். பாலாஜியிடம் மட்டுமே நெருக்கமாக பழகி வந்தார்.

பாலாஜிக்ககே முன்னுரிமை

இதனாலேயே மற்ற ஹவுஸ்மேட்ஸுடன் அவருக்கு பழகும் வாய்ப்பு இல்லாமல் போனது. பிக்பாஸ் வீட்டிலேயே பாலாஜி மட்டும் தான் நல்லவர் என்பதை போல் சுற்றி சுற்றி வந்தார். பாலாஜி எவ்வளவு காயப்படுத்தினாலும் அவருக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை அளித்தார்.

சுச்சி பிரியாவிடை

பாலாஜியை, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, சண்டை போடுவது என அவருடன் வேற லெவலில் நட்பு பாராட்டி வந்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போது கூட அவரை கட்டியணைத்துதான் பிரியா விடை கொடுத்து வந்தார்.

எதிர்பார்ப்பை நிறைவேற்றாததே

சுச்சி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற மூன்றாவது வாரத்திலேயே வெளியேறினார். அவர் வெளியேறியது தொடர்பாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இருந்த போதும் மக்களின் எதிர்பார்ப்பை சுச்சி நிறைவேற்றாததே அவர் வந்தவேகத்தில் வெளியேற காரணம் என்றும் கூறப்பட்டது.

வெளியே வந்தும் ஆதரவு

பாலாஜி குறித்து கமலிடம் பேசிய போது கூட, தன்னுடைய க்ரைம் பார்ட்னர், நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகும் பாலாஜிக்கு ஆதரவாய் பதிவிட்டு வருகிறார்.

உண்மை முகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் நடைபெற்ற கடந்து வந்தப் பாதை டாஸ்க்கில் பாலாஜி தனது அப்பாவும் அம்மாவும் குடிகாரர்கள், நண்பர்கள் உதவியில் தான் வளர்ந்தேன் என்று கூறி கண்ணீர் விட்டார். அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த சுச்சி, இதுதான் பாலாஜியின் உண்மை முகம் என்று பதிவிட்டார்.

சர்ச்சையில் சிக்கிய சுச்சி

அதனை பார்த்த ரசிகர்கள் அவர் சொன்னதெல்லாம் பொய் என்று அவருடைய நண்பர்களே சொல்கிறார்களே, நீங்கள் ஏன் இப்படி கண்மூடித்தனமாய் நம்புகிறீர்கள் என்று அறிவுரை கூறினர். இந்நிலையில் பாலாஜி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை ஷேர் செய்து பிரச்சனையில் சிக்கியுள்ளார் சுச்சி.

எங்க ஜாதியே வேற

அதாதவது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலாஜியின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ள சுச்சி ‘எங்கள் ஜாதியே வேற’ என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பாலாஜி குறித்து கூறுவதற்கு ஜாதி என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறீர்கள் அதற்கு பதிலாக வேறு வார்த்தையை சொல்லி இருக்கலாமே என கேட்டுள்ளனர்.

பெருமையாக சொல்வேன்

அதற்கு பதில் தெரிவித்துள்ள சுச்சி ‘ஜாதியை எப்படி சார் மாற்ற முடியும்? அது ஏதோ ஒரு பொறாமை பிடித்தவர்கள் செய்த கணக்கு, அதை தப்பாக நினைக்க வேண்டாம். நான் குறிப்பிட்டதை வேறு அர்த்தத்தில் பாருங்கள். நான் எப்போதும் திராவிட ஜாதி என்றும் யானை ஜாதி என்றும் பெருமையாக சொல்வேன் ‘ என்றும் கூறியுள்ளார்.

கமெண்ட் ஆஃப்

இருந்த போதும் சில ரசிகர்கள், உங்களுக்கு என்ன ஆச்சு? எபிசோட்ஸ் பார்த்த பிறகுமா இப்படி பாலாஜிக்கு சப்போர்ட் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அவரது இந்த ஜாதி பதிவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியதை தொடர்ந்து, அவர் தனது பக்கத்தில் கமெண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்துவிட்டு ஜாதி கேப்ஷனையும் தூக்கி விட்டார்.

“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 11 =

*