;
Athirady Tamil News

கிளிநொச்சி இயக்கச்சியில் இரானுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு : நால்வர் கைது!! (படங்கள்)

0

கிளிநொச்சி – இயக்கச்சி, பனிக்கையடி கிராமத்தில் வெடிப்பொருட்கள் சில வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு இன்று இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பனிக்கையடி, ஐயக்கச்சி, பளை என்ற முகவரியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல மணிநேர தேடுதலில் பின்னர் வெடிப்பொருட்களும் மீட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*