களுபோவில கீல்ஸ் ஊழியர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி;அங்காடி மூடப்பட்டது!!

களுபோவில கீல்ஸ் பல்பொருள் அங்காடியின் இரு ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதையடுத்து அது மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘அங்காடியின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் துப்புரவு நோக்கங்களுக்காக அங்காடி மூடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு பரிந்துரைத்த சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அங்காடி மீண்டும் திறக்கப்படும். அனைத்து குழு உறுப்பினர்களும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் சுயதனிமைப்படுத்தப்படுவர்.
“எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவரின் தனியுரிமையை மதிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், இதைச் செய்வதற்கு உங்கள் ஒத்துழைப்பை கேட்டுக்கொள்கிறோம்’ என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.