;
Athirady Tamil News

நாட்டில் இன்று வியாழக்கிழமை கொவிட் -19 நோயாளிகள் ஐவர் உயிரிழந்துள்ளனர்!

0

நாட்டில் இன்று வியாழக்கிழமை கொவிட் -19 நோயாளிகள் ஐவர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129ஆக உயர்வடைந்துள்ளது.

ஒக்டோபர் 4ஆம் திகதிக்கு பின் ஏற்பட்ட மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியின் பின்னர் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 25 ஆயிரத்து 760 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 ஆயிரத்து 32 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 129 பேர் உயிரிழந்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − two =

*