;
Athirady Tamil News

யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா சாரி.. ஆனா திரும்பவும் ஹர்ட் பண்ணுவேன்.. பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்! (வீடியோ, படங்கள்)

0

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள் கொண்டாட்டமாக வந்துள்ளது. நேற்றைய மூன்றாவது புரமோவை ஷோவில் இருந்து தூக்கிய நிலையில், இந்த புரமோவாவது நிகழ்ச்சியில் வருமா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

பாலாஜி முருகதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று இரவில் இருந்தே சமூக வலைதளத்தில் ஹாஷ்டேக் எல்லாம் உருவாக்கி பிக் பாஸ் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

டி.ஆர்.பி கிங்

என்னதான் பயில்வான், டுபாக்கூர், கெட்டவன், தறுதலை, டம்மி பீஸ், சண்டைக் கோழி, பொய் சொல்றான் என பாலாவை பிக் பாஸ் ரசிகர்கள் திட்டினாலும், உண்மையில் பாலாங்கிற ஒரு கேரக்டர் இந்த சீசனில் இல்லை என்றால் நிச்சயம் ஷோ ரொம்பவே போர் அடித்து இருக்கும். ரூல்ஸ் மதிச்சி விளையாடுற இடத்தில ரூல்ஸ மீறுவதும் தனித்துவம் தான்.

ஹேப்பி பர்த்டே பயில்வான்

எல்லாரும் ஆரியாகவும், ரியோவாகவும், சோமாகவும் இருந்து விட்டால், பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள். பாலா போன்ற கதாபாத்திரங்கள் தான் இந்த கேமை சூடாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கின்றன. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பாலாவுக்கு ரசிகர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் கொண்டாட்டம் பிறந்தநாள் கொண்டாட்டம் பாலாஜி முருகதாஸின் பிறந்தநாளை ஹவுஸ்மேட்கள் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடும் காட்சிகளை மூன்றாவது புரமோவில் காண்பித்துள்ளனர். மேலும், உருக்கமாக பேசி, கண்ணீர் சிந்தும் குறும்புக்கார பாலாஜிக்கு குறும்பா பாடலையும் பிக் பாஸ் எடிட்டர் புரமோவில் போட்டுள்ளார்.

வெயிட் லிஃப்டிங் கேக்

வொர்க்கவுட் ஃப்ரீக், மிஸ்டர் இன்டர்நேஷனலான பயில்வான் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்காக அனுப்பப்பட்ட ஸ்பெஷல் கேக்கில், வெயிட் லிஃப்டிங் டிசைன் கேக் மேல் வடிவமைக்கப்பட்டு செம க்யூட்டாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆஜீத் அந்த கேக்கை எடுத்து வரும் போதே, பாலா ரொம்பவே உருகி அழும் காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கிறது.

ஷிவானிக்கு கேக் ஊட்டிவிட்ட பாலா

ஷிவானி நாராயணன், அர்ச்சனா மற்றும் ஹவுஸ்மேட்களுக்கு பாலா கேக் ஊட்டி விடும் காட்சிகளும், பாலாவுக்கும் சக ஹவுஸ்மேட்கள் வாழ்த்துக்களையும், அன்பையும் தெரிவிக்கும் அழகான ஒரு காட்சியாக இந்த மூன்றாவது புரமோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

திரும்ப திரும்ப ஹர்ட் பண்ணுவேன்

யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா சாரி.. ஆனா திரும்ப திரும்ப ஹர்ட் பண்ணுவேன்.. ஏன்னா கேம் அந்த மாதிரி என தனது ஸ்டைலில் பாலா பேசுவதும் சூப்பர் தான். சண்டை போட்டு அடிச்சிக்க வைக்கத் தானே போட்டியாளர்களுக்கு உள்ளேயே நாமினேஷன் பண்றாங்க. நல்லா கேம் ஆடி மக்களே நாமினேட் பண்ணி வெளியே அனுப்பு விளையாட்டு பிக் பாஸ் இல்லையே!










“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*