;
Athirady Tamil News

வீட்டுக்கு வந்துட்டேன்.. சம்யுக்தாவுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ! (வீடியோ, படங்கள்)

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய சம்யுக்தா, தனது வீட்டுக்கு சென்ற போது அங்கே காத்திருந்த சர்ப்ரைஸ்களின் தொகுப்பு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சம்யுக்தா, கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு, குறைந்த அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெளியேறினார்.

வீட்டுக்கு சம்யுக்தா வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து அன்போடு வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

மிஸ் சென்னை

சென்னையை சேர்ந்த சீனியர் மாடல் அழகி சம்யுக்தா, பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். மிஸ் சென்னை உள்ளிட்ட ஏகப்பட்ட மாடல் அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு பட்டமும் வென்றுள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் ஏகப்பட்ட ஃபேஷன் டிப்ஸ்களை சக போட்டியாளர்களுக்கு சொல்லிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ராதிகா சீரியல்

நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் சன் டிவியில் வெளியான சந்திரகுமாரி சீரியலில் நடித்துள்ளார் சம்யுக்தா. கடந்த ஆண்டு மலையாளத்தில் இயக்குநர் ஷாஜி என். கருண் இயக்கத்தில் வெளியான OOLU எனும் ஃபேண்டஸி படத்திலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெயர் குழப்பம்

சம்யுக்தா பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் கலந்து கொள்ளப் போகிறார் என்றதுமே, கோமாளி, பப்பி படங்களில் நடித்த சம்யுக்தா ஹெக்டே தான் கலந்து கொள்ளப் போகிறார் என்கிற தகவல் வைரலானது. அந்த சமயத்தில், ஸ்போர்ட்ஸ் பிரா சர்ச்சையில் சம்யுக்தா சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அதன் பின்னர், மாடல் அழகி சம்யுக்தா தான் என்பது உறுதியானது.

மீரா மிதுனை சீண்டல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சம்யுக்தா, ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை நல்லாவே வெளிப்படுத்தினார். கேப்டனாக இருந்த போது, அவரையும் ஹவுஸ்மேட்கள் சும்மா விட வில்லை. ஆரம்பத்தில் டாஸ்க் ஒன்றில் பேசும் போது, நான் என்னை சூப்பர் மாடல்னு சொல்லிக்க மாட்டேன். நான் ஒரு சீனியர் மாடல் என பேசி, மீரா மிதுனை சீண்டி மக்கள் மத்தியில் பிரபலமானார்.


அனிதாவின் லீலை

கடந்த வாரம் நாமினேஷனுக்கு வராமல் பாலா அண்ட் கோ டீமால் பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட சம்யுக்தாவை, அனிதா டாப்புள் கார்டை நிஷாவிடம் இருந்து அடித்து புடிங்கி சம்யுக்தாவை நாமினேட் செய்து வெளியேற்றினார். அதுவும் ஸ்க்ரிப்ட் தான் என சில நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். வீட்டுக்கு வந்துட்டேன் இந்நிலையில், தற்போது சம்யுக்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ஹோம் கம்மிங் என்ற கேப்ஷனுடன் தான் வீட்டுக்கு சென்ற போது தனக்கு காத்திருந்த சர்ப்ரைஸ் வரவேற்பு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொல்லி உள்ளார். சம்யுக்தாவின் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

துள்ளிக் குதித்த ரயான்

ஆரத்தி எடுத்து சம்யுக்தாவை குடும்பத்தினர் வரவேற்ற நிலையில், சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய குழந்தை ரயான் அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து, கட்டிப்பிடித்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சம்யுக்தாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

வாய்ப்புகள் குவியும்

பிக் பாஸ் பிரபலம் என்றே இனி சம்யுக்தா அறியப்படுவார் என்று கமல் சாரே வழியனுப்பும் போது சொன்னார். அதே போல, அவரது கண்ணியத்துக்கு சிறிதளவும் குறை இருக்காது என்று ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பதிவுகளை போட்டு வாழ்த்தி வருகின்றனர். மேலும், புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கண்டிப்பா குவியும் என்றும் கூறி வருகின்றனர்.

பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 8 =

*