“புளொட்” அமைப்பின், செட்டிகுளம் பிரதேச அலுவலகம் திறப்பு விழா நிகழ்வு.. (படங்கள் & வீடியோ)

“புளொட்” அமைப்பின் செட்டிகுளம் பிரதேச அலுவலகம் திறப்பு விழா நிகழ்வு.. (படங்கள் & வீடியோ)
புளொட் அமைப்பின் செட்டிகுளம் பிரதேச அலுவலகம் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா மாவட்ட அமைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் இன்றையதினம் புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவரும், மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட் மத்தியகுழு உறுப்பினரும், புளொட் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளரும், செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் சிவம், வவுனியா நகர சபை உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன், தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான புளொட் மத்தியகுழு உறுப்பினர் யோகராஜா, வவுனியா மாவட்ட புளொட் நிதி பொறுப்பாளர் குகதாசன், புளொட்டின் கூமாங்குள பிரதேச பொறுப்பாளர் நந்தகுமார், செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர்களும், புளொட் அமைப்பின் இளைஞரணிச் செயற்பாட்டாளர்களுமான தோழர்கள் பரிகரன், நிருஜன், சுஜீவன் ஆகியோருடன் புளொட் மத்தியகுழு உறுப்பினர் தம்பாரவி, தோழர்கள் சிவா, ஓசை, பாவா, இந்திரமூர்த்தி, பாலா ஆகியோருடன் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
மேற்படி நிகழ்வின் இறுதியில் அலுவலகத் திறப்பு விழாவுக்கென நிதி பங்களிப்பு அளித்த புளொட் பிரித்தானியாக் கிளைத் தோழர் முகுந்தன் உட்பட புலம்பெயர் தோழர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல் & புகைப்படம் & வீடியோ.. “அதிரடி” இணைய நிருபர் வன்னியூரான்.