;
Athirady Tamil News

தனியார் மருத்துவமனைகளில் கொவிட்-19 நோயாளருக்கு சிகிச்சை வழங்கும் சாத்தியம் குறித்து மருத்துவ ஆலோசகர்கள் பரிசீலனை!!

0

மருத்துவ நிபுணர்களின் உயர் மட்டக்குழு ஒன்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவைச் சந்தித்து கொவிட்-19 நோயாளர்கள் அவர்கள் விரும்பினால் தனியார் துறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான சாத்தியம் குறித்து விவாதித்ததாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத் தலைவர் சவேந்திர சில்வாவை இராணுவத் தலைமையகத்தில் நேற்று சந்தித்தனர்.

தனியார் துறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பும் கொவிட்-19 நோயாளிகளுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் திறந்திருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் கூறினா். ஏனெனில் இது அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் இட நெரிசலைக் குறைக்கவும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு அதிக இடத்தை ஒதுக்கவும் உதவும்.

இதன்போது இராணுவத் தளபதி, கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையமானது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் உங்களது கோரிக்கைகள் குறித்து ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும் என உறுதியளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 2 =

*