கிளிநொச்சியில் 55 வயதுடைய ஒருவருக்கு கொரோனா!!

கிளிநொச்சியில் 55 வயதுடைய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவிலிருந்து கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இறுதிச் சடங்கு ஒன்றுக்கு வருகை தந்த 55 வயதுடைய குடும்பத் தலைவருக்கே கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலில் அந்த குடும்பத்தலைவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு முல்லேரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அங்கு நேற்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை பின்னிரவு பிசிஆர் அறிக்கை வந்ததால் மேலதிக தகவல்களை சுகாதாரத் துறையினரிடம் பெற முடியவில்லை.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”