எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் வீட்டின் கேப்டன் டாஸ்க்கில் தான் தோற்றது குறித்து ஷிவானியிடம் புலம்பி தீர்த்தார் பாலாஜி. பிக்பாஸ் வீட்டில் நேற்று கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாலாஜி, ரம்யா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்ற நிலையில் ஜித்தன் ரமேஷ் வெற்றி பெற்றார்.
தான் வெற்றி பெறாததற்கு ஆரிதான் காரணம் என குற்றம் சாட்டிய பாலாஜி அதுகுறித்து சனம் ஷெட்டியிடம் விவாதித்தார். ஆனால் தவறாக விளையாடியது பாலாஜி என்பது அப்போதே காட்டப்பட்டுவிட்டது.
ஷிவானியிடம் புலம்பல்
இருந்த போதும் ஆரிதான் தவறாக கவுண்ட் செய்துவிட்டார், அதனால்தான் தனது வெற்றி பறி போய்விட்டதாக கூறி வருகிறார் பாலாஜி. அந்த வகையில் தன்னுடைய ஷேடோவாக இருக்கும் ஷிவானியிடமும் கேப்டன் டாஸ்க்கில் தான் தோற்றது குறித்து புலம்பினார்.
பொய் பேசுறாரு
எனக்கு இன்று நடந்த கொஞ்சம் கூட நியாயமே இல்லை. ஆரி மாத்தி பேசிட்டாரு. நேர்மை நேர்மை சொல்லிட்டு பொய் பேசுறாரு.. ஃபர்ஸ்ட் நான் 4 தட்டுனன்னு சொன்னாரு.. அப்புறம் இல்ல ரெண்டுன்னு சொன்னார்.
தப்பா தட்டவே இல்லையாம்
அவர யாருமே நோட்டீஸ் பண்ணலயா.. அவர் பண்றதெல்லாம் மக்கள் பார்க்குறாங்க. அவர் பண்றெதெல்லாம் தெரியும். ரமேஷ் ஒன்னு கூட தப்பா தட்டவே இல்லையாம்.. கும்பலா இருந்த போது அவர்தான் தட்டினார் என்றார். கரெக்ட்டாதான்
போட்டார் கரெக்ட்டாதான் போட்டார் அதற்கு பதில் சொன்ன ஷிவானி, நான் பார்த்த போது ரமேஷ் அவருடையத மட்டும் தான் தட்டினாரு. 3 வயலெட் கரெக்டா அவர் பேஸ்க்கெட்கிட்ட விழுந்தது.. ஒன்னு கோட்ல விழுந்தது என்றார்.
ஏன் ஆரிய அசைன் பண்ணாங்க?
ஷிவானி சொல்வதை கூட ஏற்காத பாலாஜி, எனக்கு எதுக்கு ஆரிய அசைன் பண்ணாங்க? எனக்கும் அவருக்கும் பேக்கேஜ் இருக்குல்ல.. வேற யாரையாவது அசைன் பண்ணியிருந்தா கரெக்ட்டா கவுண்ட் பண்ணியிருப்பாங்கள்ல என்று கதறாத குறையாக புலம்பி தீர்த்தார்.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss