;
Athirady Tamil News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ & படங்கள்)

0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ & படங்கள்)

புயல் மற்றும் தொடர் மழையினால் உழைப்பை இழந்த குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
############################################

புரெவிப் புயலும், அதனால் ஏற்பட்ட தொடர் மழையினாலும் நாளாந்த உழைப்பை இழந்து தவிக்கும் வவுனியா கிராமங்களைச் சேர்ந்த பல்வேறு குடும்பங்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” உலருணவுப் பொதிகள் இன்று வெள்ளிக்கிழமை (04.12.2020) காலை தொடக்கம் மாலை வரை வழங்கி வைக்கப்பட்டது.

அண்மைக்கால அனர்த்தம் தொடர்பாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” பிரதம ஆலோசகர்களில் ஒருவரான தோழர் இராகவன் (ஆர்.ஆர்) அவர்களிடம் தெரிவித்த போது, அவரூடாக புலம்பெயர் வாழ் உறவுகளிடமும். புளொட் தோழர்களிடமும் தொடர்பு கொண்ட போது; புளொட் தளபதி மாணிக்கதாசன் அவர்களது மைத்துனரும், புளொட் பிரித்தானியாக் கிளையின் தோழரும், தொடக்ககால விடுதலைப் போரில் பல முன்னணி இராணுவத் தாக்குதலில் பங்குபற்றிய போராளியுமான தோழர் முகுந்தன் அவர்கள் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கான உலருணவுப் பொதிகளுக்கான நிதிப் பங்களிப்பு வழங்க முன்வந்தார்.

அந்தவகையில் வவுனியாவில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கிராமங்களான பத்தினியார் மகிழங்குளம், ஓயார் சின்னக்குளம், சமனங்குளம், கல்நாட்டின குளம், மதுரா நகர், புதிய கற்பகபுரம் போன்ற கிராமத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை (04.12.2020) காலை தொடக்கம் மாலைவரை கொட்டும் மழையிலும் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

எம் மக்களின் அவசரகால நிலையுணர்ந்து அவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் “மாணிக்கதாசன் நற்பணிமன்றம்” தனது நன்றியினையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறது.

தாயக சொந்தங்களே புலம்பெயர் உறவுகளே நீங்கள் வழங்கும் சமூகப் பங்களிப்பானது இவ்வாறான உண்மையில் சொல்லொனாத் துன்பத்தை அனுபவிக்கும் உறவுகளுக்கு அவர்கள் வீடு சென்று அவர்கள் தேவையறிந்து வழங்கப்படுகிறது. இந்த அரும்பெரும் நடவடிக்கையினை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தொடந்தேர்சியாக உங்கள் பங்களிப்புடன் நிறைவேற்றி வருகிறது.

எழும் தடைகளை தகர்த்து எம் சமூகத்தை உயர்த்துவோம். நன்றி

தகவல் & படங்கள் & வீடியோ.. தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வவுனியா.

மாணிக்கதாசன் நற்பணிமன்றம் தொடர்பான செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 2 =

*