;
Athirady Tamil News

உண்மைய சொல்லணும்னா.. சொல்ற அளவுக்கு ஒண்ணுமே பண்ணல பிக்பாஸ்.. வெட்கமே இல்லாமல் ஒத்துக் கொண்ட ஷிவானி!! (வீடியோ, படங்கள்)

0

மற்றவர்களை விட ஷிவானியின் நிலைமை தான் ரொம்பவே மோசமாக போய் விட்டது.

ஒரு கட்டத்தில் பிக் பாஸின் அழுத்தம் தாங்காமல், உண்மைய சொல்லணும்னா, சொல்ற அளவுக்கு ஒண்ணுமே பண்ணல பிக்பாஸ் என ஓப்பனாகவே ஓப்புக் கொண்டார்.

பாலா மாமா பின்னாடி சுற்றி அவரை என்டர்டெயின் பண்ணேன்னு நல்ல வேலை சொல்லலை என பிக் பாஸ் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

டான்ஸ் ஆடுவேன்

தினமும் காலையில பாட்டுப் போட்ட உடனே, தூங்கி எழுந்து அப்படியே வந்து நல்லா டான்ஸ் ஆடி ரசிகர்களை என்டர்டெயின் பண்ணுவேன். நல்லா டிரெஸ் பண்ணிட்டு, presentableஆ இருப்பேன். கொடுக்கிற டாஸ்க்கை எல்லாம் அந்த கேரக்டராவே மாறி பண்ணுவேன் என ஷிவானி லிஸ்ட் போட்டதும், டான்ஸ் ஆடுறது, அழகா டிரெஸ் பண்றதெல்லாம் கேட்கல என கலாய்த்து விட்டார்.

சிரித்து சமாளித்தார்

வேற என்னத்த சொல்றதுன்னு தெரியாமல் சிரித்துக் கொண்டே சமாளித்த ஷிவானியிடம் குறிப்பா, இந்த 60 நாட்கள்ல பிக் பாஸ் ரசிகர்களுக்காக நீங்க என்ன பங்களிப்பு கொடுத்திருக்கீங்கன்னு நல்லா கிடுக்கிப் பிடி கேள்வியை ஷிவானியிடம் கேட்டதும், சின்னப் பொண்ணு அப்படியே பயந்து நடுங்க ஆரம்பித்து விட்டார்.

ஒண்ணுமே பண்ணல

உண்மைய சொல்லணும்னா, சொல்ற அளவுக்கு ஒண்ணுமே பண்ணல பிக்பாஸ் என ஓப்பனாகவே ஒரு கட்டத்தில் ஷிவானி நாராயணன் ஓப்புக் கொண்டார். இப்படி 60 நாட்கள் சும்மா இருந்து விட்டு, எப்படிம்மா டைட்டில் வின் பண்ற கனவெல்லாம் காணுறீங்கன்னு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பாலாவை என்டர்டெயின் பண்ணேன்

ஷிவானி நாராயணன் பதில் சொல்ல முடியாமல் திக்கி திணறியதை பார்த்த ரசிகர்கள், 60 நாட்களும், பாலா மாமாவை நல்லாவே என்டர்டெயின் பண்ணேன் பிக் பாஸ். அவருக்கு தினமும் ஊட்டிவிடுவேன், காலையில் நான் தான் அவரை எழுப்பி விடுவேன். அவரை எதிர்ப்பவர்களை நாமினேட் செய்வேன்னு சொல்ல வேண்டியது தானே என பிக் பாஸ் ரசிகர்கள் ஷிவானிக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர்.

மிக்சர் தின்னது போதும்

ஷிவானி நாராயணன் கடந்த 60 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டு மிக்சர் தின்னது போதும். இனிமே பிக் பாஸ் மிக்சர் மூட்டைகளை அனுப்பி வைக்கப் போவதில்லை. இவர்களில் ஒவ்வொருவராக வீட்டுக்குத்தான் அனுப்பப் போகிறார். அதுதான் முதலில் இந்த டைம் பாஸ் போட்டியாளர்களை வெளுத்து வருகிறார் என சமூக வலைதளங்கள் ட்ரோல் மீம்களால் நிரம்பி வழிகின்றன.










“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.