அடடா.. ஷிவானியோட அந்த ரியாக்ஷன அப்போ பார்க்க முடியாதா? பிக்பாஸ் குறித்து ஆசீம் பரபர அறிவிப்பு! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து சீரியல் நடிகர் ஆசீம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி. இதில் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
அதன்பிறகு அர்ச்சனா, சுச்சி என இரண்டு பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர். 68 நாட்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஹோட்டலில் குவாரண்டைன்
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே, பகல் நிலவு சீரியல் நடிகர் ஆசிம் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதாக தகவல் வெளியானது. இதற்காக மற்ற போட்டியாளர்களை போலவே ஆசிமும் நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தார்.
பாதியிலேயே விலகல்
விஜய் டிவியின் பகல் நிலவு சீரியலில் ஆசிமுடன் இணைந்து நடித்த ஷிவானி, அவரை ஒன் சைடாக காதலித்தார் என்றும் ஆசிம் அவரது காதலை ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆசிம் தனது காதலை ஏற்காததால் ஷிவானி அந்த சீரியலில் இருந்து திடீரென பாதியிலேயே விலகினார்.
ஷிவானியின் ரியாக்ஷன்
பிக்பாஸ் வீட்டில் தற்போது பாலாஜியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் ஷிவானி. இதனால் ஆசிம் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் ஷிவானியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதைக் காண எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள்.
மீண்டும் குவாரண்டைன்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அம்மாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்தார் ஆசிம். அதன் பிறகும் ஆசிம் குவாரண்டைனை தொடர்ந்தார்.
ஆசிம் இன்ஸ்டா பதிவு
இதனால் கடந்த வாரமே பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் பிக்பாஸில் பங்கேற்க போவதில்லை என ஆசீம் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மன்னித்துவிடுங்கள்
இது தொடர்பாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் ”நான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை. இது எனது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என்மீது மிகுந்த அன்பையும், ஆதரவையும் காட்டிய அனைவருக்கும் நன்றி,” என கூறியுள்ளார்.
நாட் ரீச்சபிள்
ஆசீம்மின் என்ட்ரியால் ஷிவானி எப்படி ரியாக்ட் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய இந்த பதிவு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனிடையே கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சனம் ஷெட்டியின் மொபைல் நம்பர் இன்னமும் நாட் ரீச்சபிளிலேயே உள்ளது.
இதனால் அவர் இன்னும் விஜய் டிவியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளார். இதன் காரணமாக அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என தகவல் பரவி வருகிறது. சனம் ஷெட்டி நாளை அல்லது வரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைவார் என்றும் கூறப்படுகிறது.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss