;
Athirady Tamil News

பிசிஆர் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே மருதனார்மடம் பொதுச்சந்தையை முடக்குவதா இல்லையா என தீர்மானம்!! (வீடியோ)

0

இன்று மாலை கிடைக்கும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே மருதனார்மடம் பொதுச்சந்தையை முடக்குவதா இல்லையா என தீர்மாணம் எடுக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

38 வயதுடைய உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் வசிக்கும், மருதனார்மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும் குடும்பத்தலைவர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டிருந்தது.

இதனால் மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று காலை பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பிசிஆர் பரிசோதனை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.