வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு உள்பட்ட 4 நகரப் பாடசாலைகள் பூட்டு!!

வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு உள்பட்ட 4 நகரப் பாடசாலைகள் நாளை(15) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
வவுனியா சி.சி.ரி.எம். பாடசாலை, காமினி மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலம் மற்றும் இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலம் ஆகிய நான்கு பாடசாலைகளும் மூடப்படுகின்றன.
மாணவி ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் ஒரு பாடசாலையும் ஏனைய மூன்று பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு தொற்று உள்ளமை தொடர்பில் பரிசோதிக்கப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதர் உள்ளிட்டோரின் கோரிக்கைக்கு அமைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவனின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”