;
Athirady Tamil News

70 நாள் ஆச்சே ஆஜீத்.. இன்னமும் கூச்சம் ஏன்? சோலோவா ஆடல என போன் போட்டு அசிங்கப்படுத்திய ரசிகர்! (வீடியோ, படங்கள்)

0

இந்த வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் போன் கால் பண்ணி பேசினார். போன முறை ஷிவானியிடம் ரசிகர் ஒருவர் பேசிய நிலையில், இந்த முறை ஆஜீத்திடம் சிவகாசியில் இருந்து ராமகிருஷ்ண ராஜா என்பவர் பேசினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோலோவா நீங்க ஏன் பர்ஃபார்ம் பண்ண மாட்றீங்க என்கிற சிக்கலான கேள்வியையும் எழுப்பி ஆஜீத்தை அசிங்கப்படுத்தி விட்டார்.

போன் பண்ணிய ரசிகர்

காலர் டாஸ்க் முடிந்தவுடன் ஷிவானி நாராயணனிடம் ரசிகர் ஒருவர் போன் போட்டு பேசினார். ஷிவானி இன்னமும் தனித்துவமாக விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் சிவகாசியில் இருந்து ராமகிருஷ்ண ராஜா என்பவர் போன் போட்டு ஆஜீத்திடம் பேசினார்.

போன் டாஸ்க்கில் சூப்பரா பேசுனீங்க

ஆஜீத்திடம் பேசிய அந்த ரசிகர், போன் டாஸ்க்கில் சூப்பரா பர்ஃபார்ம் பண்ணீங்க ஆஜீத் என பாராட்டினார். அதற்கு நன்றி சொன்ன ஆஜீத், தனக்கே தெரியல, வெளியே வந்ததும் அனைவரும் பாராட்டிய பிறகு தான், ஓ நாம நல்லா தான் பேசியிருக்கோம் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

சோலோவா ஏன் பண்ணல

முதலில் பாராட்டிய அந்த ரசிகர் அடுத்தபடியாக, பிக் பாஸ் வீட்டில் இதற்கு முன்னும் அந்த கால் டாஸ்க்குக்கு பிறகும் உங்களுடைய சோலோ பர்ஃபார்மன்ஸை எங்களால் பார்க்க முடியவில்லையே ஏன் என்கிற கேள்வியைக் கேட்டு ஆஜீத்தை திக்குமுக்காட வைத்து விட்டார் அந்த பிக் பாஸ் ரசிகர்.

புதியவர்களிடம் பேசமாட்டேன்

அந்த ரசிகர் கேட்ட அப்படியொரு கேள்விக்கு ஆஜீத், புதுசா பார்க்கிற யார் கிட்டயும் அவ்ளோ சீக்கிரமா நான் பழகமாட்டேன், பேசமாட்டேன் என சுட்டிக் குழந்தையை போலவே ரொம்ப கூச்சத்துடன் பதில் சொன்னார். 70 நாள் ஆகுது, அர்ச்சனா அக்கா எல்லாம் அப்படி அழுது புலம்புற அளவுக்கு பழகுறாங்க, நீங்க ஏன் இப்படி கூச்சப்படுறீங்க என கலாய்த்து வருகின்றனர்.

ஏன் தெரியலன்னு தெரியல

என்னால முடிஞ்ச வரைக்கும் நல்லா தான் விளையாடிட்டு வரேன்னு நினைக்கிறேன். நான் சோலோவா பர்ஃபார்ம் பண்ணலன்னு ஏன் வெளியே தெரியலன்னு எனக்கு தெரியல. இதற்கு மேல் என்னால முடிஞ்ச கேமை சிறப்பா விளையாட முயற்சி பண்றேன் என அவருக்கு பதில் சொல்ல, ஹவுஸ்மேட்கள் அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு அந்த ரசிகர் போன் காலை கட் பண்ணிட்டார்.










“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 3 =

*