நான் சுவரை பிடித்து தத்தி தத்தி நடக்குறேன் அப்பா.. ரியோவை கண்ணீர்விட வைத்த மகள்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் தத்தி தத்தி நடக்க ஆரம்பித்த தகவலையும் அவர் அப்பா என்று அழைத்த தகவலையும் கேட்ட ரியோ கன்ஃபெஷன் ரூமில் கண்ணீர்விட்டு கதறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த ஆரி, ரியோவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆரியிடம் பேசிய பிக்பாஸ், நான் ஒரு ரெண்டு நிமிஷம் ரியோவிடம் பேசிக்கலாமா ஆரி, அவரை கொஞ்சம் கன்ஃபெஷன் ரூமுக்கு அனுப்பி வையுங்க என்றார்.
கன்ஃபெஷன் ரூமில்
ரியோ பிக்பாஸ் சொன்னதை கேட்ட ஹவுஸ்மேட்ஸ் ஆச்சரியப்பட்டனர். தொடர்ந்து கன்ஃபெஷன் ரூமுக்குள் சென்ற ரியோ, உங்களுக்கு ஐ லவ் யூ சொல்றதா முத்தம் கொடுக்குறதா எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை பிக்பாஸ் என ஆரியிடம் இருந்து பிக்பாஸ் தன்னை காப்பாற்றியதை போல பேசினார்.
யாரை மிஸ் பண்றீங்க?
தொடர்ந்து பேசிய பிக்பாஸ், நல்லா விளையாடுறீங்க ரியோ, இப்போ திரும்பி பார்த்தா யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன ரியோ ஃபிரண்ட்ஸ், வொய்ஃப் பொண்ண
மகளிடம் இருந்து தகவல்
ரித்தியை இவ்ளோ மிஸ் பண்ணுவேன்னு தெரியவில்லை என்று கூறி கண்ணீர்விட்டார். தொடர்ந்து பேசிய பிக்பாஸ் ரித்தியிடம் இருந்து உங்களுக்கு ஒரு தகவல் வந்துள்ளது ரியோ என்றார்.
தத்தி தத்தி நடக்குறேன்
அது என்னவென்று கேட்காமலே கதறினார் ரியோ. பின்னர் பேச தொடங்கிய பிக்பாஸ், செவுத்த பிடிச்சு தத்தி தத்தி நடக்கிறேன். அப்பான்னு முதல் முறையா கூப்பிட்டிருக்கேன் என்று ரியோவின் மகள் சொல்வதாக சொன்னார்.
பிக்பாஸுக்கு நன்றி
இதனைக்கேட்ட ரியோ ரித்தி ஐ லவ் யூ என கதறினார், அம்மாவ நல்லா பாத்துக்குங்க.. என்ற அவர் நான் வெளியே வந்ததும் என்னையும் பார்த்துக்குங்க என்று கூறினார். மேலும் பிக்பாஸுக்கு நன்றி கூறிய ரியோ லவ் யூ பிக்பாஸ் என்றார்.
லவ் யூ டூ
அதற்கு வெல்கம் ரியோ என்ற பிக்பாஸ், லவ் யூ டூ என்று கூறி உச்சி குளிர வைத்தார் பிக்பாஸ். தொடர்ந்து பேசிய பிக்பாஸ் இப்போ நீங்க வெளியே போய், செய்து கொண்டிருந்த வேலையை தொடரலாம் என்றார். அதற்கு என்னைதான் செஞ்சாங்க என்று காமெடியாக கூறினார் ரியோ.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss