இவரோட வீக்னஸ் ஊருக்கே தெரிஞ்சு போச்சு.. டீமை விட்டே தூக்குங்க.. கடும் எதிர்ப்பு.. குழப்பத்தில் கோலி!! (படங்கள்)
இந்திய அணியில் ப்ரித்வி ஷா – ஷுப்மன் கில் இடையே யாரை துவக்க வீரராக ஆட வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார் கேப்டன் விராட் கோலி. இருவரில் ப்ரித்வி ஷாவை அணியை விட்டு நீக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.
ப்ரித்வி ஷா பேட்டிங் கில் சில அடிப்படை தவறுகளை செய்து வருகிறார். அவரை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எளிதாக வீழ்த்த முடியும் என்ற நிலையே உள்ளது. அதுதான் சிக்கலாக மாறி உள்ளது.
ப்ரித்வி ஷா தவறு
ப்ரித்வி ஷா சிறந்த பேட்ஸ்மேனாக வருவார், அடுத்த சச்சின், அடுத்த சேவாக் என்றெல்லாம் அறிமுகமான போது புகழப்பட்டார். ஆனால், அவரிடம் அப்போது முதலே பேட்டிங் டெக்னிக்கில் தவறு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
ஸ்விங் பந்துவீச்சு
அவர் கால்களை நகர்த்தாமல் பேட்டிங் ஆடி வந்தார். ஸ்விங் பந்துகளை சந்திக்கும் போதும் அவர் கால்களை நகர்த்தாமல் ஆட முயற்சி செய்து வருகிறார். அப்போது அவரது விக்கெட் பறிபோகிறது. பலரும் இதை சுட்டிக் காட்டியும் அவர் தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
ஐபிஎல் பார்ம்
இப்ல் தொடரில் ப்ரித்வி ஷா மோசமான பார்மில் இருந்தார். முதல் சில போட்டிகளில் அபாரமாக ஆடிய அவர் அதன் பின் தன் பலவீனத்தால் வீழ்ந்தார். எதிரணிகள் அவரது பலவீனத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டன. அதே போல, ஆஸ்திரேலியா தொடரிலும் நடக்கலாம் என்பதே விமர்சகர்கள் முன் வைக்கும் கருத்து.
ஷுப்மன் கில் அபாரம்
மயங்க் அகர்வால் உடன் துவக்கம் அளிக்க ப்ரித்வி ஷாவை தவிர்த்து அணியில் கேஎல் ராகுல், ஷுப்மன் கில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஷுப்மன் கில் நல்ல பார்மில் இருக்கிறார். அவரை அணியில் தேர்வு செய்து துவக்க வீரராக ஆட வைக்க வேண்டும் என்ற கருத்தும் கூறப்படுகிறது.
கேஎல் ராகுல்
கேஎல் ராகுலும் நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால், அவர் கடைசியாக ஆடிய டெஸ்ட் போட்டிகளில் சுமாராகவே ஆடி இருந்தார். எனவே, அவருக்கு ஒருநாள் போட்டி மற்றும் டி20 பேட்டிங் பார்ம் அடிப்படையில் டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வியும் சந்தேகமும் உள்ளது.
குழப்பத்தில் கோலி
கேப்டன் விராட் கோலி இதனால் குழப்பத்தில் இருக்கிறார். ஷுப்மன் கில் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை. ப்ரித்வி ஷா டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் இருந்தும் மோசமான பார்மில் இருக்கிறார். இருவரில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார் கேப்டன் கோலி.
ரோஹித் வருவார்
இது தவிர மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா அணியில் இணைவார். அவர் வரும் போது அணியில் துவக்க வீரராக ஆட வைப்பது என்பதில் இன்னும் போட்டி நிலவும். எனவே, அதையும் மனதில் வைத்தே முடிவு எடுக்க வேண்டும்.
அணி மாறுமா?
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவை ஆட வைக்க வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்தால் ஷுப்மன் கில் அல்லது ப்ரித்வி ஷா, இருவரில் யார் துவக்க வீரராக முதல் இரண்டு போட்டிகளில் ஆடினாலும் அவர்கள் நீக்கப்பட வேண்டும்.