;
Athirady Tamil News

வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் – ஆளுநர் சார்ள்ஸ்!!

0

வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் வழங்கத் தவறியமையே கொரோனா தொற்றுப் பரவலுக்குக் காரணம்.

மருதனார்மட தொற்று நிலைமை தொடர்பில் 500 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும்வரை, தொற்று சமூகப் பரவலாக உருமாருவதைத் தடுக்கும் நோக்கில், தொற்றாளர்கள்
அதிகமாகவுள்ள இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஏற்கனவே பொதுமக்களுக்கு ஒரு அறிவித்தலை வழங்கியிருந்தேன். வெளியிடங்களிலிருந்து யாராவது உங்கள் பிரதேசங்களுக்கு வந்தால்
அது தொடர்பில் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்குமாறு.

ஆனால் இந்த அறிவிப்பு தொடர்பில் பொதுமக்கள் எமக்கு ஒத்துழையாமையே இன்று தொற்றுப் பரவுவதற்கு ஏதுவாகிவிட்டது.

வடக்கில் இன்னமும் கொரோனா கொத்தணிகள் உருவாகவில்லை. ஆகவே மக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, தொற்றிலிருந்து தம்மையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

கீரிமலை அந்தியேட்டி மண்டபம், குருக்கள் தனிமைப்படுத்தலில்!!

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் சுகாதாரத் திணைக்களம் ஊடாக வெளியிடப்படும் முடிவே உத்தியோக பூர்வமானதாகும் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்!!

மருதனார்மடம் சந்தை கொத்தணி – மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று!!

உடுவில் பிரதேசத்தின் லொக் டவுண் நீக்கம்!!

மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.!!

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பி. சி. ஆர் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பங்கள்!!

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு தனிமைப்படுத்தல்!!

மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்படுகின்றன!!

பிசிஆர் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே மருதனார்மடம் பொதுச்சந்தையை முடக்குவதா இல்லையா என தீர்மானம்!! (வீடியோ)

மருதனார்மடம் சந்தையில் 6 பேருக்கு கோரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.