;
Athirady Tamil News

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொவிட் – 19!!

0

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (16) புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

சங்கானை பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் 100 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த சங்கானையில் 4 பேரும் பண்டத்தரிப்பு, மானிப்பாய், வடலியடைப்பைச் சேர்ந்த ஒருவரும் உடுவிலைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 100 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் – ஆளுநர் சார்ள்ஸ்!!

கீரிமலை அந்தியேட்டி மண்டபம், குருக்கள் தனிமைப்படுத்தலில்!!

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் சுகாதாரத் திணைக்களம் ஊடாக வெளியிடப்படும் முடிவே உத்தியோக பூர்வமானதாகும் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்!!

மருதனார்மடம் சந்தை கொத்தணி – மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று!!

உடுவில் பிரதேசத்தின் லொக் டவுண் நீக்கம்!!

மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.!!

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பி. சி. ஆர் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பங்கள்!!

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு தனிமைப்படுத்தல்!!

மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்படுகின்றன!!

பிசிஆர் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே மருதனார்மடம் பொதுச்சந்தையை முடக்குவதா இல்லையா என தீர்மானம்!! (வீடியோ)

மருதனார்மடம் சந்தையில் 6 பேருக்கு கோரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.