வீடு திரும்பிய நிஷாவை ஆரத்தி எடுத்து வரவேற்ற அம்மா.. கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீடு திரும்பிய நிஷாவுக்கு அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று நிஷா வெளியேற்றப்பட்டார். நேற்று முன்தினமே நேற்றைக்கான எபிசோடு காட்சியாக்கப்பட்டதால் நிஷா வெளியேறிய தகவல் கசிந்தது.
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நிஷா வெளியேற்றப்பட்டது அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பானது. நிஷா வெளியேறிய போது அர்ச்சனா போகாதடா போகாதடா என கதறி அழுதார்.
ஆரத்தி எடுத்து வரவேற்பு
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிஷா நேற்று தனது வீட்டில் காரில் வந்து இறங்கும் வீடியோ காட்சிகளும் அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்கும் காட்சிகளும் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
கேக் வெட்டி கொண்டாட்டம்
அதில் நிஷாவின் அம்மா ஆரத்தி எடுத்தபிறகு வீட்டிற்குள் செல்லும் நிஷா, அங்கு நின்றிருந்த தனது குழந்தையை கட்டியணைத்து முத்தமிடுகிறார். மேலும் நிஷாவின் குடும்பத்தினர் அவருக்கு கேக் வெட்டியும் அவரது வருகையை கொண்டாடினர்.
மாறிய பாணி
கேக்கில் வெல்கம் டு அறந்தாங்கி நிஷா என்ற வாசகம் கொண்ட கேக்கை வெட்டினர். முன்னதாக நேற்று கமல்ஹாசனிடம் பேசிய நிஷா, ஆரம்பத்தில் சரியாக தான் விளையாடியதாகவும் இருப்பினும் யார் மனதையும் நோகடிக்காமல் விளையாட வேண்டும் என்று விளையாடியது தவறு என்றும் கூறினார். அர்ச்சனாவுடன் நெருக்கம் பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது காமெடியாக பேசி கலகலப்பாக்கி வந்தார் நிஷா. அர்ச்சனா, ரியோ, ஜித்தன் ரமேஷ் மட்டும்தான் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் என நினைத்து அந்த வட்டத்துக்குள்ளேயே இருந்தார். இதனாலேயே அவரை அன்ஃபிட் என வெளியேற்றி விட்டார்கள் ரசிகர்கள்.
#Nisha arrival at home#biggbosstamil #Biggbosstamil4 pic.twitter.com/0nOHnIlbWL
— Imadh (@MSimath) December 13, 2020
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss