என்ன ஒரு வில்லத்தனம்.. விழுந்துவாரி அனிதா செய்த காரியம்.. நரியாய் மாறிய ஆரி! (வீடியோ, படங்கள்)

அனிதா டாஸ்க்கின் போது செய்த வில்லத்தனத்தால் ஆரி நரியாகிவிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்படுள்ளது.
அதன்படி பிக்பாஸ் வீடு கோழிப்பண்ணையாக மாற்றப்பட்டுள்ளது.
கோழிகளின் முட்டைகள்
இதில் இரண்டு ஹவுஸ்மேட்ஸ் கோழிகளாகவும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் நரிகளாகவும் இருந்தனர். கோழிகளாக உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் முட்டைகளை அவர்கள் நரிகளின் கைகள் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வாலை பிடித்தால்..
முட்டையை நரி தொட்டுவிட்டால், அந்த கோழி நரியாகி விடும். அதேநேரத்தில் முட்டைகளை தொட வரும் நரிகளின் வாலை கோழி பிடித்து விட்டால் அந்த நரி அந்த சுற்றிலிருந்து வெளியேற வேண்டும்.
ஸ்பெஷல் பவர்
மேலும் கோழிகள் தங்களுக்கு கொடுக்கப்படும் கரன்சிகளை வைத்து தங்க முட்டைகளை நரிகள் தொடாதவாறு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் எந்த நபரிடம் அதிக பிக்பாஸ் கரன்சி உள்ளதோ அந்த நபருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் எனறும் அறிவிக்கப்பட்டது.
ஆரியை குறி வைத்த அர்ச்சனா
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் முதலில் பாலாஜியும் ஆரியும் கோழிகளாக இருந்தனர். மற்ற அனைத்து ஹவுஸ்மேட்ஸும் நரிகளாக இருந்தனர். இதில் ஆரியை குறி வைத்த அர்ச்சனா அவருடைய முட்டையை தொடச் சென்றார் அர்ச்சனா.
நரியான ஆரி
அந்த நேரத்தில் பின்னால் இருந்து வந்த அனிதா ஆரியின் முட்டையை தொட முயன்றார். அப்போது அவர் அதனை தடுக்க முயன்றதால் அனிதா கீழே விழுந்தார். இருந்த போதும் அனிதா ஆரியின் முட்டையை தொட்டதால் ஆரி நரியாகி விட்டார்.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss