;
Athirady Tamil News

நீதிமன்ற எரிப்பின் ஊடாக குற்றவாளிகளை பாதுகாக்க ஜனாதிபதி பிரதமர் விரும்பியிருக்கமாட்டார்கள் – அமைச்சர் டக்ளஸ்!! (வீடியோ)

0

நீதிமன்ற எரிப்பின் ஊடாக குற்றவாளிகளை பாதுகாக்க ஜனாதிபதி பிரதமர் விரும்பியிருக்கமாட்டார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் நீதிமன்றில் தீ வைக்கப்பட்டு குற்றவாளிகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட செயற்பாடாக குற்றம் சாட்டப்படுகிறதே. அதற்கு என்ன பதிலை நீங்கள் கூறுகின்றீர்கள் என அமைச்சரிடம் ஊடகவியலாளர் வினவினார் அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆளும் தரப்பு ஒன்றை சொன்னால் எதிர் தரப்பு எதிர்க்கின்றதும், அந்த எதிர்க்கட்சி ஆளும் தரப்பாக செல்லும்போது ஆளும் தரப்பு எதிர் தரப்பாக செல்கின்றபோது நடக்கின்றது. ஆனால் விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அது நிச்சயம் கருத்தி எடுக்கப்படும். அந்த நேரம் உண்மையில் என்ன நடந்தது என தெரியவரும். ஏனெனில் இதை ஜனாதிபதியும், பிரதமரும் விரும்பியிருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தாங்கள் எந்த அளவிற்கு இந்த நாட்டை நேசிக்கின்றவர்கள், எந்தளவிற்கு சட்ட ஒழுங்கை கடைப்பிடிப்பவர்கள் என்பதை எண்ணங்களும் செயற்பாடுகளும் இருக்கின்றபடியினால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று நம்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இரணைமடு குளத்து மீனவர்கள் ஓய்வு மண்டபம் அமைத்தல், தொழில் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல தேவைப்பாடுகளை முன்வைத்துள்ளார்கள். அவர்களிற்கு அந்த தேவைகளை விரைவில் பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

10 ஆண்டுகளாக இவ்வாறான தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு தொழிலாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இரண்டு ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்ற நிலையில் கடந்த அரசாங்கம் ஏன் இதனை அவர்களிற்கு பெற்றுக்கொடுக்கவில்லை என ஊடகவியலாளர் வினவியபோது,
என்னத்தை சொல்லி நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவந்தார்களோ அதில் எதையும் அவர்கள் உறுப்படியாக செய்யவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*