;
Athirady Tamil News

கொஞ்சம் கூட வொர்த் இல்லை.. பாலா வந்ததும் முட்டையை பறிகொடுத்த ஷிவானி.. எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ்!! (வீடியோ, படங்கள்)

0

கோழி டிரெஸ்சில் பார்க்க அழகாக இருந்தார். அது மட்டும் தான் ஷிவானி இந்த லக்சரி டாஸ்க்கில் செய்தது. நரியாகவும் ஒண்ணும் ஆடவில்லை. கோழியாகவும் கொஞ்சம் கூட தனது தங்க முட்டையை காப்பாற்ற போராடவில்லை.

70 நாட்களாக என்ன பண்ணீங்க கேட்டால், கன்ஃபெஷன் ரூமில் குழந்தையை போல அழ மட்டும் தெரிகிறது என சமூக வலைதளங்களில் ஷிவானி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அழகு பதுமை

2.4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள சின்னத்திரை நடிகை ஷிவானி இந்த பிக்பாஸ் வீட்டில் செட் பிராப்பர்ட்டியாகவும், அழகு பதுமையாகவும் மட்டுமே இந்த 73 நாட்களை கடந்துள்ளார். தனியாக விளையாட சந்தர்ப்பம் கிடைத்தாலும், கொஞ்சம் கூட விளையாட முனைப்பே காட்டுவதில்லை.

கோழி வெடக்கோழி

ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கும் படத்தில் வரும் கோழி வெடக்கோழி பாட்டுக்கு ஆடும் அளவுக்கு அவ்வளவு அழகாக சிக்கென இருக்கிறார் ஷிவானி நாராயணன். ஜீன்ஸ் பேன்ட்டை அணிந்து கொண்டு, கிராப் டப்பில், இடுப்பு பகுதியையும் பளிங்கு முதுகையும் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அடுத்த நொடியே அவுட்

ஆனால், கொஞ்சம் கூட ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பே ஷிவானியிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தனது தங்க முட்டையை காப்பாற்ற டீலிங் போடுவது, அந்த முட்டையை காப்பாற்ற போராடுவது என எந்தவொரு முயற்சியும் செய்யாமல், இருந்த ஷிவானியிடம் பஸர் அடித்த அடுத்த நொடியே பாலா முட்டையை தொட்டு தூக்கிக் கொண்டு போய் வெற்றிப் பெற்றார்.

இது என்ன ஷிவானி?

கமல் சார் எபிசோடில் இங்க ஃபேவர் இருக்கு ஆனால், சிலர் மட்டுமே ஃபேவரிடிசம் பண்ணுகின்றனர் என பேசிய ஷிவானி நாராயணன். பாலாவிடம் முட்டையை ஈஸியாக பறிகொடுத்ததை என்னவென்று எடுத்துக் கொள்வது, பாலாவுக்காகத் தான் தனது கேமை ஷிவானி விட்டுக் கொடுத்தார் என்றும், இது என்ன ஷிவானி? இதற்கு பெயர் ஃபேவரிடிஸம் இல்லை என்றால், உங்களுக்கு விளையாட தெரியவில்லையா? என்கிற கேள்விகளையும் எழுப்பி கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஹீரோயின் சான்ஸ்

எப்படியோ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் புதுப்பட வாய்ப்புகள் நடிகை ஷிவானியை தானாக தேடி வரும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. யாருடனும் கோபம் கொள்ளாமல் அப்படியே எத்தனை நாட்கள் இந்த வீட்டில் ஓட்ட முடியுமோ ஓட்டி, சம்பாதித்துக் கொள்ளலாம் என விளையாடி வருகிறார் ஷிவானி நாராயணன்.









You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 3 =

*