இணுவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுவரும் 19 வயது உயர்தர வகுப்பு மாணவனுக்கும் கொரோனாத் தொற்று!!

மருதனார்மடம் கொத்தணி தொடர்பால் இணுவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுவரும் 19 வயது உயர்தர வகுப்பு மாணவனுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மருதனார்மடம் கொத்தணியில் நேற்றைய தினம் ஐவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களில் ஒருவரே இணுவில் பகுதியைச் சேர்ந்த இணுவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் கலைப்பீடத்தில் கல்வி கற்று வரும் மாணவன் என தெரியவருகிறது.
குறித்த மாணவன் யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்வரை பாடசாலைக்கு சென்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து குறித்த மாணவனுடன் தொடப்புபட்டவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களையும் பரிசோதனைக்குட்படுத்துவதுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தும் பணிகளை அப்பகுதி சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் – ஆளுநர் சார்ள்ஸ்!!
மருதனார்மடம் சந்தை கொத்தணி – மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று!!
மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.!!
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி!! (வீடியோ, படங்கள்)
யாழ்ப்பாணத்தில் பி. சி. ஆர் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பங்கள்!!