கசிப்பை கட்டுப்படுத்தக்கோரி கிளிநொச்சி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மகஜர்!! (வீடியோ, படங்கள்)

கண்ணகிபுரம் மேற்கு மக்கள் தமது பிரதேசத்தில் உள்ள கசிப்பை கட்டுப்படுத்தக்கோரி கிளிநொச்சி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மகஜர் கையளித்துள்ளனர். இன்று காலை இரணைமடு சந்தியில் அமைந்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு சென்ற குறிதத் கிராமத்தின் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று மகயரை கையளித்துள்ளனர்.
தமது பிரதேசத்தில் காணப்படும் கட்டவிரோத மது உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தி எதிர்கால சந்ததியின் வாழ்விற்கு சுமுகமான சூழலை ஏற்படுத்தி தருமாறு தெரிவித்தே பிரதேச மக்களால் ஒப்பமிடப்பட்டு குறித்த மகயர் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
தமது பிரதேசத்தில் உள்ள சட்டவிரோத மது உற்பத்தி தொடர்பில் அக்கராயன் பொலிசாருக்கு தகவல் வழங்குகின்ற போதிலும், அத்தகவல் மீண்டும் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடுபவர்களிற்கு திரும்புவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பொலிசார் மீது நாம் குற்றம் சொல்லவில்லை. ஆனாலும் அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவபவர்கள் பொலிசாரின் துணை இருப்பது போன்று காண்பித்துக்கொள்கின்றனர்.
தகவல் வழங்கப்பட்டது அக்கராயன் பொலிசாருக்கு என அறிந்ததும், அக்கராயன் பொலிசாரா? உடனே கைதானவர்களை வெளியே எடுக்கின்றோம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் குறித்த சட்டவிரோத செயற்பாட்டினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தே நாங்கள் இன்று இரணைமடுவில் அமைந்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”