மருதனார்மடம் கொத்தணி: உடுவிலில் பெண்கள் இருவருக்கு தொற்று!!

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு கொவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (18) வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரத் தொடர்புடைய 47 மற்றும் 21 வயதுடைய பெண்கள் இருவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 108 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
இணுவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுவரும் 19 வயது உயர்தர வகுப்பு மாணவனுக்கும் கொரோனாத் தொற்று!!
வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் – ஆளுநர் சார்ள்ஸ்!!
மருதனார்மடம் சந்தை கொத்தணி – மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று!!
மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.!!
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி!! (வீடியோ, படங்கள்)
யாழ்ப்பாணத்தில் பி. சி. ஆர் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பங்கள்!!