மருதனார்மடம் கொத்தணி – சுன்னாகத்தில் ஒருவருக்கு தொற்று!!

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் ஒருவருக்கு கொவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (18) வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்டவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த சுன்னாகத்தில் வசிப்பவர் என்று அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை … Continue reading மருதனார்மடம் கொத்தணி – சுன்னாகத்தில் ஒருவருக்கு தொற்று!!