;
Athirady Tamil News

இது லிஸ்ட்லேயே இல்லையே.. ஜெயிலுக்குள் முதல் முறையாக தடம் பதித்த அந்த போட்டியாளர்..2வது புரமோ அவுட்! (வீடியோ, படங்கள்)

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் டாஸ்க்கில் சிறப்பாக செய்த போட்டியாளர்களுக்கான நாமினேஷன் நடைபெற்றது.

இதில் அதிகமாக பாலாஜியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

ஷிவானியின் பெயர்

இதில் வொர்ஸ்ட் பர்ஃபாமருக்கான நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் முதல் நபராய் வரும் ஆரி, ஷிவானியின் பெயரை நாமினேட் செய்கிறார். அவங்க மேல அவங்க நம்பிக்கை வச்சு விளையாடியிருக்கலாம்னு தோனுது என்கிறார்.

கேபியின் பெயர்

அடுத்து வரும் அர்ச்சனா, ஆரியின் பெயரை நாமினேட் செய்கிறார். மேலும் எந்த மெத்தடாலஜியை கொண்டு வந்தாலும் சரியில்லை என குறை சொல்வதாகவும் கூறுகிறார். அடுத்து வரும் ரம்யா, நான் இரண்டாவதாக கேபியை நாமினேட் செய்வதாக கூறினார்.

குற்றச்சாட்டுகள் பிடிக்கவில்லை

பாலாஜி, ரியோ, அனிதா, சோம் ஆகியோரும் கேபியை நாமினேட் சுவாரசியம் குறைவான போட்டியாளர் என நாமினேட் செய்தனர். இறுதியாக பேசும் ஷிவானி, நாமினேஷன் ஒகேதான் ஆனால் குற்றச்சாட்டுக்கள் எனக்கு பிடிக்கவில்லை என்கிறார்.

முதல் முறையாக கேபி

இதனை தொடர்ந்து ஷிவானி மற்றும் கேபி ஆகிய இருவரும் ஓய்வு அறைக்கு அனுப்பப்படுகின்றனர். ஷிவானி ஏற்கனவே ஒரு முறை ஜித்தன் ரமேஷுடன் சேர்ந்து ஜெயிலுக்கு போயுள்ளார். ஆனால் கேபி முதல் முறையாக ஜெயிலில் தடம் பதித்துள்ளார்.

நிம்மதி பெருமூச்சு

முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வாரம் ஆரியை தான் வொர்ஸ்ட் பர்ஃபாமர் என்று ஜெயிலுக்கு அனுப்புவார்கள் என்ற அச்சத்தில் இருந்தனர். ஆனால் ஆரி இந்த வாரம் ஜெயிலுக்கு போகாமல் தப்பித்ததை பார்த்த நெட்டிசன்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.










“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*