;
Athirady Tamil News

யார் பெஸ்ட் பர்ஃபாமர்.. அக்காதான் ரொம்ப நல்லா பண்ணாங்க.. அர்ச்சனா பக்கம் சாய்ந்த அனிதா! (வீடியோ, படங்கள்)

0

பிக்பாஸ் வீட்டில் பெஸ்ட் பர்ஃபாமருக்கான நாமினேஷன் நடைபெறுவது முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப் பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்காக பிக்பாஸ் வீடு கோழிப்பண்ணையாகவும் ஹவுஸ்மேட்ஸ் நரிகளாகவும் கோழிகளாகவும் மாறினர்.

இதில் வழக்கம் போல் ரூல்ஸ் பிரேக்குகள், சண்டைகள் சச்சரவுகள், சர்ச்சைகள் இடம் பெற்றன. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

அர்ச்சனா பக்கம் சாய்ந்த அனிதா

அதன்படி பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பெஸ்ட் பர்ஃபாமருக்கான நாமினேஷன் நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதில் முதல் ஆளாய் நாமினேட் செய்ய வரும் அனிதா, நான் அர்ச்சனா அக்காவை சொல்கிறேன்.

பாலா நல்லா பண்ணினார்

அவர் ஒவ்வொரு முறையும் இன்னோவேட்டிவாய் ஐடியா கொடுத்தார். அதனால் அர்ச்சனா அக்காதான் ரொம்ப நல்லா பண்ணினார் என்று கூறினார். அடுத்து வரும் சோம், பாலாதான் நல்லா பண்ணினார் என்று கூறினார்.

முட்டையை உடைத்தார்

அடுத்து வரும் ஆரியும் பாலாஜியைதான் கூறினார். அவரை தொடர்ந்து வந்த ரியோவும் பாலாஜியைதான் கூறினார். முட்டையை உடைத்துவிட்டார் இருந்தாலும் சிறப்பாய் செய்தார் என்று கூறினார்.

கோழியாய் கன்றாவி

ஷிவானி பெயரை கூறிய பாலாஜி எந்த இடத்திலும் ரூல்ஸை பிரேக் பண்ணவில்லை என்றார். அடுத்து வந்த அர்ச்சனா, சோம் மற்றும் ரம்யாவின் பெயரை நாமினேட் செய்தார். சோம் என்னதான் என் முட்டையை உடைத்திருந்தாலும் நரியாய் இருக்கும் போது நரியாய் இருந்தார். கோழியாய் இருக்கும் கன்றாவியாய் இருந்தார் என்று கூறுகிறார்.

வொர்ஸ்ட் பர்ஃபாமரில்

முதல் புரமோவின் படி பெஸ்ட் பர்ஃபாமருக்கான இடத்தில் யாரும் ஆரியின் பெயரை கூறவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் வொர்ஸ்ட் பர்ஃபாமர் என்று அர்ச்சனா முதல் அனிதா வரை அனைவருமே ஆரியின் பெயரைதான் சொல்வார்கள் என்று கூறி வருகின்றனர்.









“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 17 =

*