2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாய விஞ்ஞானிக்கான விருது கலாநிதி அரசகேசரிக்கு வழங்கப்பட்டுளது.!! (படங்கள்)
2020 ஆண்டுக்கான சிறந்த விவசாய விஞ்ஞானிக்கான இலங்கையின் தேசிய விருது கலாநிதி அரசகேசரிக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.
பேராதனையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விருதுக்காக வருடந்தோறும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. குறித்த விருதினை முதன் முதலாக தமிழர் ஒருவர் இவ்வருடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெங்காயம், மிளகாய், நிலக்கடலை, குரக்கன், மா போன்ற பயிர்களில் புதிய இனங்களை கண்டுபிடித்தமைக்காக கிளிநொச்சி இரணைமடு சந்தியில்அமைந்துள்ள விவசாய ஆராச்சி நிலையத்தின் உதவிப் பணிப்பாளரான கலாநிதி அரசகேசரி அவர்களுக்கு இவ்விருது வழங்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”