;
Athirady Tamil News

வவுனியா புதிய சாலம்பைக்குளம் கிராமம் சுகாதார பிரிவினர்களினால் விடுவிப்பு!!

0

வவுனியா புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து புதிய சாலம்பைக்குளம் கிராமம் கடந்த (12.12.2020) முதல் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் கடந்த (14.12.2020) அன்று வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை , மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலாவதாக அடையாளம் காணப்பட்ட புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த 28வயதுடைய தாயும் அவரது 5வயதுடைய மகளும் தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் பின்னர் அடையாளம் காணப்பட்ட 38 வயதுடைய தந்தை , 8 வயதுடைய மகன் , 2 வயதுடைய சிறுமி ஆகியோரும் தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

புதிய சாலம்பைக்குளம் முடக்கப்பட்டு இது வரையிலும் சமூகப்பரவல் எவையும் இன்மையினால் புதிய சாலம்பைக்குளம் பகுதியினை சேர்ந்த 46 நபர்களை தவிர மிகுதி அனைவரையும் தனிமைப்படுத்தலிருந்து இன்று சுகாதார பிரிவினர் விடுவித்துள்ளனர்.

இதை சமயம் வவுனியாவில் நான்குக்கு மேற்பட்ட பாடசாலைகள் காலவறையின்றி மூடப்பட்டதுடன் வவுனியா நகரின் கற்குளி முதலாம் ஒழுங்கை , திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கை என்பன சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.