;
Athirady Tamil News

செம அதிரடி.. டார்கெட்டை ஊதித் தள்ளிய ஆஸி.. முதல் டெஸ்டில் மண்ணைக் கவ்விய இந்திய அணி.. படுதோல்வி! (வீடியோ, படங்கள்)

0

டார்கெட்டை ஊதித் தள்ளிய ஆஸி.. முதல் டெஸ்டில் மண்ணைக் கவ்விய இந்திய அணி.. படுதோல்வி! அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 244 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாம் இன்னிங்க்ஸில் வெறும் 36 ரன்களுக்கு சுருண்ட இந்தியா, ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. அந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி எளிதாக எட்டியது.

முதல் இன்னிங்க்ஸ்

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி இருந்தது. முதலில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை கடுமையாக சோதித்து 244 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம் ஆடினாலும், ரன் குவிக்க முடியவில்லை. 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இரண்டாம் இன்னிங்க்ஸ் சொதப்பல்

இரண்டாம் இன்னிங்க்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது, மூன்றாம் நாள் காலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வரிசையாக விக்கெட்களை பறிகொடுத்தது.

புயலாய் தாக்கிய இருவர்

ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட் வீசிய ஓவர்களில் இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. கோலி, புஜாரா, ரஹானே போன்ற சிறந்த அனுபவ டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் கூட அவர்களிடம் சிக்கினார்கள்.

குறைந்த இலக்கு

இந்திய அணி 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடியது. அஸ்வின் லாபுஷாக்னே விக்கெட்டை வீழ்த்தினார். மேத்யூ வேட் ரன் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலியா வெற்றி

எனினும், ஆஸ்திரேலியா 21 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. துவக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 51 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என முன்னிலை பெற்றது.



வார்த்தையால் அதை சொல்ல முடியாது.. எல்லாமே போச்சு.. தோல்விக்கு காரணம்.. புலம்பித் தள்ளிய கோலி! (வீடியோ, படங்கள்)

இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. கோலி டீமுக்கு நேர்ந்த அவமானம்.. அதிர்ச்சித் தகவல்! (படங்கள்)

வெறும் 36 ரன்.. சுருண்ட இந்திய அணி.. 10 ரன் கூட தாண்டாத வீரர்கள்.. செம ஷாக்.. அதிர வைத்த ஆஸி.! (படங்கள்)

முதல் டெஸ்டில் ஆடும் இந்திய அணி லெவன்.. லிஸ்ட்டை லீக் செய்த பிசிசிஐ.. 3 முக்கிய வீரர்கள் நீக்கம்!! (படங்கள்)

இவரோட வீக்னஸ் ஊருக்கே தெரிஞ்சு போச்சு.. டீமை விட்டே தூக்குங்க.. கடும் எதிர்ப்பு.. குழப்பத்தில் கோலி!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 18 =

*