;
Athirady Tamil News

திடீரென அதிகரிக்கும் கொரோனா.. ஐசியூவில் படுக்கைகள் காலி.. கலங்கும் கலிபோர்னியா!! (வீடியோ, படங்கள்)

0

தேங்க்ஸ் கிவ்விங் விடுமுறையைத் தொடர்ந்து கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு நோயாளிகளுக்கு ஐசியூ படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பெட்கள் அனைத்துமே நிரம்பி விட்டதாக கலிபோர்னியா மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிக மோசமான வேகத்தில் கொரோனா கலிபோர்னியாவில் பரவுகிறது என்கிறார், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியின், பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர்.பர்பரா பெர்ரர். லாக்டவுன் மற்றும், தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் உள்ளூர் நிர்வாகம் கடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளது. ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிகள் அங்கு செலுத்தப்பட்டு வந்தாலும், அது பலனளிக்க நேரமெடுக்கம் எனக் கூறப்படுகிறது.

லாக்டவுன்

2 வாரங்கள் முன்பு கலிபோர்னியாவில், லாக்டவுன் நடைமுறை அமலுக்கு வந்தது. இருப்பினும், வைரஸ் 2 வாரங்களுக்கு மேலும் உடலில் இருந்து பிறகு வெளிப்படும் தன்மை கொண்டது என்பதால், இப்போதைக்கு அதன் ரிசல்ட் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

நோய் பரவல்

நவம்பர் 1ம் தேதி, கலிபோர்னியாவில் 7 நாட்களின் சராசரியை எடுத்துப் பார்த்தால், 4,183 என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று முன்தினம், அது 38,774 என்ற அளவுக்கு அதிகரித்தது என்றால் அங்கு நோய் பரவும் வேகத்தை உங்களால் கணிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவத் துறை நிபுணர்கள்.

மக்கள் கேட்கவில்லை

வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மக்களை அரசு கேட்டுக் கொண்டும் அதை மதிக்காதது உள்ளிட்டவை, திடீரென நோய் பரவல் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. கலிஃபோர்னியா பொது சுகாதாரத் துறை அறிவிப்புப்படி, வியாழக்கிழமை 379 கொரோனா நோயாளிகள் அங்கு உயிரிழந்தனர். இதுதான் அந்த மாகாணத்தின், மிக உயர்ந்த ஒரு நாள் எண்ணிக்கையாகும்.

கலிபோர்னியா நிலமை

புதன்கிழமை 293 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். நேற்று, கலிபோர்னியாவில், 300 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை 22,000 க்கும் மேற்பட்ட கலிஃபோர்னியர்கள் கொரோனாவால் இறந்துள்ளனர். கலிபோர்னியாவின் ஒட்டுமொத்த கேஸ்கள் எண்ணிக்கை 17 லட்சத்திற்கும் அதிகமாகும், வியாழக்கிழமை 52,281 புதிய கேஸ்கள் சேர்ந்துள்ளன.


மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் மூலம் போதைப்பொருள் கடத்தலா? – விசாரணைக்கு பொலிஸார் காத்திருப்பு!!

மருதனார்மடம் கொத்தணி: உடுவிலில் பெண்கள் இருவருக்கு தொற்று!!

யாழ். திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கும் கொரோனா!!

இணுவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுவரும் 19 வயது உயர்தர வகுப்பு மாணவனுக்கும் கொரோனாத் தொற்று!!

சங்கானை சந்தை; கோவிட் – 19 பாதித்த 8 பேரின் வதிவிட விவரம்!!

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொவிட் – 19!!

வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் – ஆளுநர் சார்ள்ஸ்!!

கீரிமலை அந்தியேட்டி மண்டபம், குருக்கள் தனிமைப்படுத்தலில்!!

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் சுகாதாரத் திணைக்களம் ஊடாக வெளியிடப்படும் முடிவே உத்தியோக பூர்வமானதாகும் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்!!

மருதனார்மடம் சந்தை கொத்தணி – மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று!!

உடுவில் பிரதேசத்தின் லொக் டவுண் நீக்கம்!!

மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.!!

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பி. சி. ஆர் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பங்கள்!!

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு தனிமைப்படுத்தல்!!

மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்படுகின்றன!!

பிசிஆர் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே மருதனார்மடம் பொதுச்சந்தையை முடக்குவதா இல்லையா என தீர்மானம்!! (வீடியோ)

மருதனார்மடம் சந்தையில் 6 பேருக்கு கோரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*