பகலிரவு டெஸ்ட் போட்டிகள்… 8ல மோதல்… எல்லாத்துலயும் வெற்றிதான்.. ஆஸ்திரேலியா அபாரம்! (படங்கள்)
கடந்த 2015ல் தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை நியூசிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடி வெற்றி கொண்டது. அதுமுதல் அது விளையாடிய அனைத்து பகலிரவு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிதான். ஆனால் தான் விளையாடிய 8 பகலிரவு போட்டிகளையும் சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியா விளையாடி வெற்றி கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி துவங்கி நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான பகலிரவு போட்டியின் வெற்றி மூலம் தனது 8வது பகலிரவு போட்டியை வெற்றி கொண்டுள்ளது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியா அபாரம்
இந்தியாவிற்கு எதிராக நேற்று நடந்து முடிந்துள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கொண்டுள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியாவிற்கு சாதகமாக இந்த போட்டி அமைந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக பௌலிங் மற்றும் பேட்டிங்கின் மூலம் போட்டியை வெற்றி கொண்டது.
முதலிடத்தில் ஆஸ்திரேலியா
இதன்மூலம் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 4க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இதனிடையே, தான் இதுவரை விளையாடியுள்ள 8 பகலிரவு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி கொண்டு முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 4 போட்டிகளில் பங்கேற்று ஒன்றில் வெற்றி கொண்டு பாகிஸ்தான் உள்ளது.
2015ல் முதல் போட்டி
இந்தியாவிற்கு எதிரான கடந்த பகலிரவு போட்டி உள்ளிட்ட 8 போட்டிகளையும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணிலேயே விளையாடியுள்ளது. முதல் முறையாக கடந்த 2015ல் நியூசிலாந்திற்கு எதிரான பகலிரவு போட்டி மூலம் துவக்கிய ஆஸ்திரேலியா, அந்த அணியுடன் இதுவரை இருமுறை பகலிரவு போட்டிகளில் விளையாடியுள்ளது.
வெற்றித் தேர்வு
இதேபோல பாகிஸ்தானுடன் இருமுறையும் இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுடன் ஒருமுறையும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. முக்கியமாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை விளையாட அடிலெய்டையே அதிகமாக ஆஸ்திரேலியா தேர்வு செய்து விளையாடி வெற்றியும் பெற்றுள்ளது.
7 சதங்கள்
மேலும் இதுவரை விளையாடியுள்ள 8 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் 7 முறை சதங்களை அந்த அணிவீரர்கள் அடித்துள்ளனர். அதிகபட்சமாக டேவிட் வார்னர், 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 335 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டில் விளையாடப்பட்டுள்ள இந்தியாவிற்கு எதிரான பகலிரவு போட்டியில் அபாரமான ஆட்டத்தை ஆஸ்திரேலியா வெளிப்படுத்தியுள்ளது.