இளம்பெண்ணிடம் இருந்து நைசாக லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ்… வீடியோவை பார்த்தால் ஷாக் ஆயிருவீங்க…!! (வீடியோ, படங்கள்)

இளம்பெண்ணிடம் இருந்து பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் காணொளி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருவது வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை அபராதம் மூலம் தண்டிப்பதற்கான அதிகாரம் போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டிய போக்குவரத்து காவல் துறையினர் ஒரு சிலர், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு, தவறுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். சில சமயங்களில் எவ்வித தவறும் செய்யாத வாகன ஓட்டிகளிடமும் அவர்கள் வசூல் வேட்டையாடுவதாக நீண்ட காலமாக புகார்கள் உள்ளன.
இதை நிரூபிக்கும் வகையில், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறும் போக்குவரத்து காவல் துறையினரின் காணொளிகள் அவ்வப்போது வெளியாகி சமூக வலை தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த வகையில் தற்போது ஒரு காணொளி வெளியாகி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர், மற்றொரு பெண்ணிடம் இருந்து லஞ்சம் பெறுவதை இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது. பெண் ஒருவர் ஸ்கூட்டரில் அமர்ந்திருப்பதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது. அவருக்கு அருகே மற்றொரு பெண் நின்று கொண்டுள்ளார். அவர்கள் இரண்டு பேரும் ஸ்கூட்டரில் ஒன்றாக வந்தவர்கள் போல தெரிகிறது.
இந்த 2 பெண்களுக்கும் அருகே லஞ்சம் வாங்கிய பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி நின்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 பெண்களில் ஒருவர், அந்த பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரியிடம் சென்று ஏதோ பேசுகிறார். அனேகமாக பணத்தை எப்படி கொடுப்பது? என அந்த பெண்ணிடம், போக்குவரத்து காவல் துறை அதிகாரி கூறியதை போல் தெரிகிறது.
இதன்பின் ஸ்கூட்டரில் வந்த பெண் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ரூபாய் தாளை எடுத்து, யாருக்கும் தெரியாதபடி, பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரியின் பேண்ட் பாக்கெட்டில் வைக்கிறார். இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சாலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. வாகனங்கள் இயங்கும் சப்தத்தையும் இந்த காணொளியில் கேட்க முடிகிறது.
எனவே யாருக்கும் தெரியாமல் அந்த பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி லஞ்சம் பெற முயன்றதை போல் தெரிகிறது. ஆனால் அங்கிருந்த யாரோ இந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ளனர். லஞ்சம் வாங்கிய பிறகு ஸ்கூட்டரில் வந்த 2 பெண்களையும் அங்கிருந்து செல்வதற்கு, அந்த பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி அனுமதித்துள்ளார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மேலும் சில காவல் துறை அதிகாரிகளும் இருப்பதை இந்த காணொளியின் இறுதியில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த காணொளி எங்கு? எப்போது? எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த காணொளி, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
லஞ்சம் வாங்கிய பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரியை சமூக வலை தளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவதும், இதுபோன்ற காணொளிகள் வெளியாவதும் இது முதல் முறை கிடையாது. தொடர்ச்சியாக நடந்து வரும் இப்படிப்பட்ட சம்பவங்கள் வாகன ஓட்டிகளை அதிருப்தியடைய செய்துள்ளது.
https://www.facebook.com/watch/?v=212851330407936&t=1