;
Athirady Tamil News

மாணிக்கதாசன் பவுண்டேசன் ஊடாக, உதவி வழங்கிய புங்குடுதீவு ஜானகி அம்மா குடும்பம்.. (படங்கள் & வீடியோ)

0

மாணிக்கதாசன் பவுண்டேசன் ஊடாக, உதவி வழங்கிய புங்குடுதீவு ஜானகி அம்மா குடும்பம்.. (படங்கள் & வீடியோ)

யாழ்.புங்குடுதீவை சேர்ந்தவரும், யாழ்.கோப்பாயில் வசிப்பவருமான பசுபதிப்பிள்ளை நித்தியானந்தம் அவர்கள் நீரழிவு காரணமாக இடதுகாலை இழந்துள்ளார். அதனால் செயற்கைக் காலைப் பொருத்துவதுக்கான நிதி உதவியை “மாணிக்கதாசன் பவுண்டேசனின்” பிரதம ஆலோசகர்களில் ஒருவரான, சுவிஸ்ரஞ்சன் அவர்களிடம் தொலைபேசி மூலம் அவரது சகோதரி கோரி இருந்தார். இதனை எழுத்து மூலம் முன்வைத்தால் பரிசீலிப்பதாகத் தெரிவித்ததுக்கு அமைய, அவர்களும் “மாணிக்கதாசன் பவுண்டேசனிடம்” அதுக்குரிய ஆதாரங்களுடன் கோரிக்கையை முன்வைத்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து புளொட் சுவிஸ்கிளைத் தோழரும், அமரத்துவமடைந்த சுப்பிரமணியம் ஜானகி அவர்களின் மருமகனுமான திரு.திருமதி கைலாசநாதன் (குழந்தை) வாசுகி குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் மேற்படி உதவியானது (நிதி உதவியும், உலருணர்வுப் பொருட்களும்) “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

இன்றையதினம் நடைபெற்ற மேற்படி நிகழ்வானது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர்களில் ஒருவரும், யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினரும், புங்குடுதீவு மண்ணின் மைந்தருமான தோழர்.தர்ஷானந்த் தலைமையில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதவானும், முன்னாள் அதிபருமான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜானகி அவர்கள் இறைபதம் அடைந்த முப்பத்தியோராம் நாளை முன்னிட்டு, அன்னாரின் மகள் சார்பில் திரு.திருமதி.கைலாசநாதன் (குழந்தை) வாசுகி குடும்பத்தின் சார்பில், அவர்களது நிதி பங்களிப்பில் “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக இந்த உதவி வழங்கல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிதிஉதவியளித்த திரு.திருமதி. கைலாசநாதன் வாசுகி குடும்பத்துக்கும், இதனை முன்னின்று நடத்தியோருக்கும் “மாணிக்கதாசன் பவுண்டேசன்” மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அமரத்துவமடைந்த சுப்பிரமணியம் ஜானகி அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். (மேற்படிக் குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில், “கொரோனா” அச்ச்சுறுத்தல் காரணமாக வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள சில குடும்பங்களுக்கும், மாணிக்கதாசன் பவுண்டேசன் ஊடாக “உலருணர்வுப் பொதிகள்” வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.)

தகவல் & படங்கள்.. -தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வவுனியா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 1 =

*