;
Athirady Tamil News

ஒட்டு மொத்தமாய் சேர்ந்து ஆரியை டார்கெட் செய்த ஹவுஸ்மேட்ஸ்.. ஆஜித் முதல் அனிதா வரை.. ரம்யா வேற லெவல்! (வீடியோ, படங்கள்)

0

பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கின் போதும் கூட அனைத்து ஹவுஸ்மேட்ஸும் ஆரியை டார்கெட் செய்தது அப்பட்டமாக தெரிந்தது.

பிக்பாஸ் வீட்டில் நேற்று மாட்னீயா என்ற தலைப்பில் ஃபன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் ஒருவர் கையை நீட்டியிருக்க மற்றொருவர் அடிக்க வேண்டும்.

அடித்த நபர் அங்கிருக்கும் சீட்டில் எழுதியுள்ளதற்கு ஏற்ப கேள்வி கேட்பார். அதற்கு அடி வாங்கிய நபர் பதில் சொல்ல வேண்டும்.

பாலாஜியின் கேள்வி

இந்த டாஸ்க்கில் அனிதா முதல் ஆஜித் வரை அனைவருமே ஆரியை டார்க்கெட் செய்து கேள்வி கேட்டு பதில் கூறினர். பாலா அனிதாவிடம் இந்த வீட்டில் யார் தன்னை உயர்த்தியும் மற்றவர்களை மட்டப்படுத்தியும் விளையாடுகிறார் என்று கேட்டு ஆரியை பார்த்தார்.

ஆரி மட்டப்படுத்துகிறார்

ஏற்கனவே ஆரியுடன் நான்சிங்கில் இருந்த அனிதா ஆரிதான் என்று பதில் சொன்னார். கமல் எபிசோடில் அவரை நான் நரி என்று கூறியதால் என்னை மட்டப்படுத்தி வருகிறார் என்று கூறினார். அனிதா என்ற பதில் வரவேண்டும் என்பதற்காகதான் ரியோவிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்டார் என்றார்.

ஆரி விளையாடுவது பிடிக்கவில்லை

தொடர்ந்து வந்த ஆஜித்தும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆரியின் பெயரை சொல்லி, அவர் மீதுதான் அதிக புகார்கள் வருகிறது. அவர் விளையாடுறது எனக்கு பிடிக்கவில்லை, அவர் எல்லோருடைய குறையையும் சொல்கிறார் என்றார். இதேபோல் ஷிவானியும் ஆரி ஆடியன்ஸை பேட் இன்ஃபுளூயன்ஸ் செய்கிறார் என்றார்.

ஆரியை நாமினேட் செய்து

தொடர்ந்து வந்த ரம்யாவும் வேற லெவலில் விளையாடினார். யார் யாரையெல்லாம் நாமினேட் செய்திருப்பார்கள் என்று கேட்டதற்கு அனைத்து ஹவுஸ்மேட்ஸின் பெயரையும் கூறி கட்டாயமாக ஒரு போட்டியாளராக ஆரியின் பெயரை நாமினேட் செய்திருப்பார்கள் என்றார்.

ஆரியை டார்கெட் செய்து

அனிதா பேசிய பேச்சு ஊரறிந்தது. ஆரி தனது குடும்பத்தை பற்றி தவறாக பேசுகிறார் என்று கூறி தனது சுயரூபத்தை காட்டி ஒட்டு மொத்த ரசிகர்களையும் முகம் சுளிக்க வைத்தார். பாலாஜி ஹவுஸ்மேட்ஸிடம் கேட்ட கேள்வியும் ஆரியை டார்கெட் செய்வது போல் இருந்தது.

ஆரியை குறி வைத்து

மாட்னீயா டாஸ்கே ஆரியை குறித்து கொடுக்கப்பட்டது போன்று கேள்விகளுக்கும் பதில்களுக்கும் ஆரியின் பெயரை பயன்படுத்தினர் ஹவுஸ்மேட்ஸ். மொத்த ஹவுஸ்மேட்ஸும் சேர்ந்து ஆரியை டார்கெட் பண்ணுவதை பார்த்த ரசிகர்கள், ஆரிதான் வின்னராக வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.










“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.