;
Athirady Tamil News

மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம்!!

0

மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது. இதனாலேயே குறுகிய காலத்தில் மிக அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து எமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எதிர்வரும் நாள்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது. இச்சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது.

அதிலும் தற்பொழுது யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது. இதனாலேயே குறுகிய காலத்தில் மிக அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று நோயினால் நாட்டில் பல இறப்புகளும் அடுத்தடுத்து ஏற்பட்டுவருகின்றன.

இந்நிலையில் பண்டிகைகளுக்காக பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் பொழுது இந்நோய் எமது பிரதேசத்திலும் மேலும் தீவிரமாகப் பரவும் வாய்ப்புள்ளது. எனவே இப் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் தேவையற்ற ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பதுடன் மத வழியாடுகளில் ஈடுபடும் போது கட்டாயமாக முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியையும் பேணுதல் வேண்டும்.

அனைவரும் இப்பண்டிகைக் காலத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

எனவே நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து எமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம்.

மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

மருதனார்மடம் கொத்தணி – சுன்னாகத்தில் ஒருவருக்கு தொற்று!!

மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் மூலம் போதைப்பொருள் கடத்தலா? – விசாரணைக்கு பொலிஸார் காத்திருப்பு!!

மருதனார்மடம் கொத்தணி: உடுவிலில் பெண்கள் இருவருக்கு தொற்று!!

யாழ். திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கும் கொரோனா!!

இணுவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுவரும் 19 வயது உயர்தர வகுப்பு மாணவனுக்கும் கொரோனாத் தொற்று!!

சங்கானை சந்தை; கோவிட் – 19 பாதித்த 8 பேரின் வதிவிட விவரம்!!

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொவிட் – 19!!

வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் – ஆளுநர் சார்ள்ஸ்!!

கீரிமலை அந்தியேட்டி மண்டபம், குருக்கள் தனிமைப்படுத்தலில்!!

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் சுகாதாரத் திணைக்களம் ஊடாக வெளியிடப்படும் முடிவே உத்தியோக பூர்வமானதாகும் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்!!

மருதனார்மடம் சந்தை கொத்தணி – மேலும் ஐவருக்கு கோரோனா தொற்று!!

உடுவில் பிரதேசத்தின் லொக் டவுண் நீக்கம்!!

மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.!!

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுல் 7 நபர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பி. சி. ஆர் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பங்கள்!!

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு தனிமைப்படுத்தல்!!

மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்படுகின்றன!!

பிசிஆர் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே மருதனார்மடம் பொதுச்சந்தையை முடக்குவதா இல்லையா என தீர்மானம்!! (வீடியோ)

மருதனார்மடம் சந்தையில் 6 பேருக்கு கோரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.