பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 கைதிகளுக்கு கொவிட்!!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க ட்ரூ சிலோனுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 73 பேர் சிறைச்சாலைகளில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி, கொவிட் தொற்றுக்குள்ளான 13 பேரும், சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”