இன்னும் 2 நாள்தான்.. மொத்தமாக வேலையை காட்டும் ரஹானே.. கோலிக்கு நெருக்கமானவர்களை தூக்க பிளான்! (படங்கள்)
இந்திய அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் கோலி வாய்ப்பு கொடுத்த பல வீரர்களை மொத்தமாக கழட்டி விடும் திட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனை ரஹானே இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடக்க உள்ளது. இரண்டு அணிகளும் இந்த டெஸ்ட் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய அணி நேற்றே வலைப்பயிற்சியை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இந்திய அணி இன்று வலைப்பயிற்சியை தொடங்கி உள்ளது.
கேப்டன்
இந்திய அணியின் கேப்டனாக கோலி இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் ஆட மாட்டார். தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க உள்ளதால் கோலி இந்தியா திரும்பிட்டார். இதனால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே வழி நடத்த உள்ளார்.
வாய்ப்பு
இந்திய அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் கோலி வாய்ப்பு கொடுத்த பல வீரர்களை மொத்தமாக கழட்டி விடும் திட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனை ரஹானே இருப்பதாக கூறப்படுகிறது. ஆம் கோலி பயன்படுத்திய அணியை பயன்படுத்த கூடாது என்ற திட்டத்தில் ரஹானே இருப்பதாக கூறுகிறார்கள். புதிய அணியை இறக்க வேண்டும் என்று ரஹானே நினைக்கிறார்.
ரஹானே
கோலி பயன்படுத்திய சில வீரர்களை தனக்கு கீழ் இறக்கும் விருப்பம் ரஹானேவிற்கு இல்லை. இதனால் தனக்கு தகுந்த அணியை களமிறக்க ரஹானே முடிவு செய்துள்ளார். அதன்படி பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, சாகா ஆகியோரை ரஹானே நீக்க போகிறார் என்கிறார்கள். இவர்கள் கோலிக்கு நெருக்கமான வீரர்கள்.
நீக்கம்
இவர்களை நீக்கிவிட்டு அணிக்குள் ஜடேஜா, பண்ட், சுப்மான் கில் ஆகியோரை கொண்டு ரஹானே திட்டமிட்டுள்ளார். காயம் காரணமாக் ஷமி விலகிவிட்டால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் சைனியை கொண்டு வர ரஹானே திட்டமிட்டுள்ளார். கோலி இல்லாமல் எப்படியாவது இந்த டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ரஹானே உள்ளார்.