40 நிமிடம்.. பிரஷருக்கு இடையில் உறுதியாக நின்ற சுப்மான் கில்.. மிரண்ட ஆஸி.. அந்த சிரிப்புதான் மாஸ்! ! (படங்கள்)
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று அறிமுக போட்டியிலேயே சுப்மான் கில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேட்டிங் செய்து இருக்கிறார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 195 ரன்கள் எடுத்தது.
அதன்பின் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.
சுப்மான் கில்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று அறிமுக போட்டியிலேயே சுப்மான் கில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேட்டிங் செய்து இருக்கிறார். பிட்ச் பவுலிங் செய்ய சாதகமாக இருந்தாலும் கூட சுப்மான் கில் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்த போட்டியில் இந்த அணியின் ஓப்பனர் மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார்.
டாப் ஆர்டர்
இவர் அவுட்டான காரணத்தால் இந்திய அணியின் டாப் ஆர்டர் மீண்டும் மொத்தமாக சரிந்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது. அதோடு அறிமுக பேட்ஸ்மேன் சுப்மான் கில் மீது அதிக அழுத்தம் இருந்தது. இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய பவுலிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது.
சவால்
பிட்ச் பவுலிங் செய்ய சாதகமாக இருந்த காரணத்தால் ஒவ்வொரு பந்தும் சவாலாக வந்தது. நினைத்ததை விட பந்து அதிகமாக ஸ்விங் ஆனது. அதிலும் பேட் கும்மின்ஸ், ஸ்டார்க் ஓவர்கள் மிகவும் சவாலாக இருந்தது. ஆனால் சுப்மான் கில் இதை எல்லாம் பார்த்து கலங்கி போகவில்லை.
டென்சன் இல்லை
முதல் போட்டிக்கான டென்சன் இவரிடம் இல்லை. முதல் தர போட்டிகளில் எப்படி ஆடுவாரோ அதேபோல் நிலையாக நின்று சுப்மான் கில் ஆடினார். அதோடு புஜாராவும் அவ்வப்போது இவருக்கு டிப்ஸ் கொடுத்து வந்தார். டெங்ஷனுக்கு மத்தியில் சுப்மான் கில் மிகவும் உறுதியாக நின்று, ஆடினார்.
சிறப்பு
இந்திய அணி மேலும் விக்கெட் எதையும் இழக்காமல் சுப்மான் கில் காப்பாற்றினார். அதோடு 5 பவுண்டரிகளை அடித்து 28 ரன்களும் எடுத்தார். 40 நிமிடம் இவர் இன்று களத்தில் இருந்தார். போட்டி முடியும் நேரத்தில் இப்படி இளம் வீரர் ஒருவர் உறுதியாக நிற்பது வரவேற்க வேண்டிய விஷயம். 40 நிமிடமும் இவர் சிறப்பாக ஆடினார். எல்லாம் போக கடைசியில் இவர் சிரித்தபடி வெளியேறியது பெரிய வைரலானது.
பவுலிங்
இந்த ஆஸ்திரேலிய பவுலிங்கை பார்த்து நான் பயப்பட மாட்டேன் என்று சுப்மான் கில் கெத்தாக சிரித்தபடி பெவிலியன் திரும்பியது வைரலாகி வருகிறது. நாளைய ஆட்டத்தில் இவர் தனது பேட்டிங்கை தொடர்வார். நாளையும் இவர் சிறப்பாக இதேபோல் நம்பிக்கையோடு ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.