;
Athirady Tamil News

புங்குடுதீவு ஜானகி அம்மா நினைவாக, “M.F” க்கு ஊடாக வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ & படங்கள்)

0

புங்குடுதீவு ஜானகி அம்மா நினைவாக, “M.F” க்கு ஊடாக வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ & படங்கள்)

அமரர் ஜானகி சுப்பிரமணியம் நினைவாக அன்னாரது குடும்பத்தினரால் வாழ்வாதார உணவுப் பொதிகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” வழங்கி வைக்கப்பட்டது…
############################################

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜானகி அவர்கள் இறைபதம் அடைந்த முப்பத்தியோராம் நாளை முன்னிட்டு, அன்னாரின் மகள் சார்பில் திரு.திருமதி.கைலாசநாதன் (குழந்தை) வாசுகி குடும்பத்தின் சார்பில், அவர்களது நிதி பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணிமன்றத்தின் ஊடாக கொரோனா தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள், வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்து அம்மாக்களுக்கான விசேட உணவு மற்றும் செயற்கை கால் பொருத்துவதற்கான நிதி.. என பல்வேறு உதவிகள் அன்னாரது 31,ஆம் வீட்டுக் கிருத்திய நாளை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் அன்னாரின் குடும்பத்தின் நிதி பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டது.

தாயகத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக வவுனியா பம்பைமடு கிராமசேவையாளர் பிரிவிலுள்ள புதிய கற்பகபுரம் மேட்டுத் தெரு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட அன்றாட கூலித் தொழிலாளர் குடும்பங்களின் நிலை குறித்து கிராம சேவையாளர் புதிய கற்பகபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு.முகுந்தன்மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திரு.விஜயகுமார் ஆகியோர் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” தொடர்பு கொண்டு அவரச நிவாரணப் பொருட்களாக உலருணவுப் பொதிகள் தேவை பற்றி கேட்டனர்.. இவ்விடயம் உடனடியாக மன்றத்தின் பிரதம ஆலோசகர்ளிடம் தெரிவிக்கப்பட்டதின் பின்னர், அவர்களின் பணிப்புரைக்கமைய இன்றைய தினம் பல்வேறு சிரமத்தின் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களின் வீட்டு வாசலில் உலருணவுப் பொதிகள் வைக்கப்பட்டு எடுத்துக் கொள்ள சொல்லப்பட்டது.

இதேபோல் இன்றையதினம் வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்தில் வசிக்கும் அம்மாக்களுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த தினத்தில் யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த பசுபதி நித்தியானந்தன் என்பவருக்கு செயற்க்கைக் கால் பொருத்துவத்துக்கான நிதி உதவியும், உலருணர்வுப் பொருட்களும் “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர்களில் ஒருவரும், யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினரும், புங்குடுதீவு மண்ணின் மைந்தருமான தோழர். தர்ஷானந்த் தலைமையில் புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதவானும், முன்னாள் அதிபருமான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இவ்வுதவியை அமரர் சுப்பிரமணியம் ஜானகி அம்மா நினைவாக அவர்களின் குடும்பத்தினர் உதவி செய்தனர். இதனை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர் ஒழுங்கமைத்து செயற்பட்டனர்

மேற்படி நிதிஉதவியளித்த திரு.திருமதி. கைலாசநாதன் வாசுகி குடும்பத்துக்கும், இதனை முன்னின்று நடத்தியோருக்கும் “மாணிக்கதாசன் பவுண்டேசன்” மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அமரத்துவமடைந்த சுப்பிரமணியம் ஜானகி அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

தகவல் & படங்கள்… -தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வவுனியா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.