32 ஆண்டுகள்ல இல்லாத வரலாறு… சாதித்து காட்டிய இந்திய பௌலர்கள்.. சிறப்பான சம்பவம்! (படங்கள்)
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
வரும் 7ம் தேதி மெல்போர்னில் 3வது போட்டி நடைபெறவுள்ளது.
இந்தியா அபாரம்
நடந்து முடிந்துள்ள இரண்டாவது போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா, அஸ்வின், சிராஜ் மற்றும் உமேஷ் உள்ளிட்ட பௌலர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். டெஸ்ட் போட்டியின் அறிமுக வீரர் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் ஏமாற்றம்
இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பினர். சதம் என்றில்லை ஒருவரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. டேவிட் வார்னர் காயம் காரணமாக அணியில் இடம்பெறாத நிலையில் ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட வீரர்களும் சொதப்பினர்.
அரைசதம் அடிக்காத ஆஸி. வீரர்கள்
இந்நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றை தற்போது சந்தித்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் இங்கு விளையாடிய ஆஸ்திரேலியா வீரர்கள் அரைசதம் கூட அடிக்காமல் இருந்ததில்லை. ஆனால் இந்த 2வது போட்டியில் ஒரு வீரரும் அரைசதம் அடிக்காமல் வெளியேறினர்.
சதமடிக்காத ஆஸி. வீரர்கள்
மேலும் இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் ஒரு சதத்தைக்கூட அடிக்கவில்லை. மாறாக இந்திய வீரர்கள் 6 சதங்களை அடித்துள்ளனர். புஜாரா, ரிஷப் பந்த், விராட் கோலி, ரஹானே ஆகியோர் கடந்த 6 போட்டிகளில் 6 சதங்களை அடித்து அசத்தியுள்ளனர். புஜாரா 3 சதங்களை அடித்துள்ளார்.