;
Athirady Tamil News

இல்வாரை குளத்தை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிப்பு!!

0

சாவகச்சேரி கனகம்புளியடி வீதியிலுள்ள இல்வாரை குளத்திலிருந்து வாய்க்கால் வழியாக வெளியேறும் நீரோட்டத்தை மக்கள் பார்வையிட சாவகச்சேரி சுகாதார தரப்பினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மரங்களுக்கு நடுவே இயற்கை அழகுடன் காணப்படும் நீரோட்டத்தை பார்வையிட யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாகனங்களில் வருகை தருகின்றனர்.

பார்வையிட வருகின்ற மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி பேணாத நிலை காணப்படுகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் அதனை செவிமடுக்கவில்லை.

இதனால் இப்பகுதியில் மக்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது எனவும், இதனை மீறுபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*