;
Athirady Tamil News

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது!!

0

நாட்டில் மேலும் 460 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 418 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொட ர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ள னர்.

அதில் 35 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 063 ஆக உயர்ந் துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 7 ஆயிரத்து 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 925 ஆக அதிகரித் துள் ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 620 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.